கிறிஸ்து
பிறந்த திருநாளுக்கு முன்வரும் 9ம் ஞாயிறு
(வருகையின்
ஞாயிறுக்கு முன்வரும் 5ம் ஞாயிறு)
Ninth Sunday before Christmas
ஆரம்ப வசனம்
பூமியும் அதின்
நிறைவும், உலகமும்,
அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
சங்கீதம் 24.1
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, வானத்தையும்
பூமியையும் படைத்து, உமது
திருக்கரங்களைப் பகுத்துணரவும், உம்மைப் பக்திவினயத்தோடும், நன்றியறிதலோடும் சேவிக்கவும், போதித்தருள வேண்டும் என்று உம்மோடும்,
பரிசுத்த ஆவியோடும்,
எல்லாவற்றிற்கும் மேலாக இப்பொழுதும்
எப்பொழுதும் மிக மேன்மையோடு அரசாளும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை
முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
எந்த வேளையில்
ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
நீர் கொடுக்க,
அவைகள் வாங்கிக்கொள்ளும்,
நீர் உம்முடைய கையைத் திறக்க,
அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
சங்கீதம் 1004.27, 28
கிறிஸ்து
பிறந்த திருநாளுக்கு முன்வரும் 8ம் ஞாயிறு
(வருகையின்
ஞாயிறுக்கு முன்வரும் 4ம் ஞாயிறு)
Eighth Sunday before Christmas
ஆரம்ப வசனம்
அன்றியும் ஒரே
மனுஷனுடைய கீழ்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டது போல்,
ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர்
நீதிமான்களாக்கப்படுவார்கள். ரோமர் 5.19.
சுருக்க ஜெபம்
பரமபிதாவே,
பிசானினுடைய கிரியைகளை அழிக்கவும்,
எங்களைக் கடவுளுடைய புத்திரரும்,
நித்திய ஜீவனுக்குச் சுதந்தரரும்
ஆக்கவும், உமது
திருக்குமாரனைப் பிரசன்னமாகம்படிச் செய்தீரே. இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கிற
நாங்கள், அவர்
வல்லமையோடு மறுபடியும் பிரசன்னமாகும் பொழுது, அவருடைய மகிமையுள்ள நித்திய ராஜ்ஜியத்தில் அவருக்கு
ஒப்பானவர்களாகும் பொருட்டு, அவர் சுத்தமுள்ளவராய் இருக்கிறதுபோல,
நாங்களும் எங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்படி,
எங்களுக்குக் கிருபை செய்ய வேண்டும்
என்று, உம்மோடும்
பரிசுத்த ஆவியோடும், ஒரே கடவுளாக
என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்கப்
பின்வரும் வசனம்
ஆதாமுக்குள்
எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 1 கொரிந்தியர் 15.22
கிறிஸ்து
பிறந்த திருநாளுக்கு முன்வரும் 7ம் ஞாயிறு
(வருகையின்
ஞாயிறுக்கு முன்வரும் 3ம் ஞாயிறு)
பச்சை நிறம்
Seventh Sunday before Christmas
ஆரம்ப வசனம்
அநேக
ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி ஆபிரகாம்
நம்மெல்லாருக்கும் தகப்பனானான். ரோமர் 4.16,17
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, உம்மால்
தெரிந்துகொள்ளப்பட்ட உமது ஊழியன் ஆபிரகாம், தன்வழி பூமியிலுள்ள குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்பட,
உமது அழைப்புக்கு உண்மையோடு
கீழ்ப்படிந்து, உமது வாக்குத்
தத்தத்தில் மகிழ்ந்தாரே, எங்களில் உமது வாக்குத்தத்தம் நிறைவேறத் தக்கதாக அவருடைய
விசுவாசத்தைப் போன்ற விசுவாசத்தை எங்களுக்கும் தந்தருள வேண்டும் என்று,
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை
முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
ஆபிரகாம் தான்
சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும் படி அழைக்கப்பட்டபோது,
கீழப்படிந்து,
தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல்
புறப்பட்டுப் போனான். எபிரேயர் 11.8.
கிறிஸ்து
பிறந்த திருநாளுக்கு முன்வரும் 6ம் ஞாயிறு
(வருகையின்
ஞாயிறுக்கு முன்வரும் 2ம் ஞாயிறு)
Sixth Sunday before Christmas
ஆரம்ப வசனம்
நியாயப்
பிரமானம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது. கிருபையும் சத்தியமும் இயேசு
கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. பரி.யோவான் 1.17
சுருக்க ஜெபம்
எங்கள்
மீட்பரும் ஆண்டவருமாகிய கடவுளே, உமது ஜனங்களின் கூக்குருலைக் கேட்டு,
அவர்களை அடிமைத்தனத்தினின்று
விடுதலையாக்க உமது உழியனாகிய மோசேயை அனுப்பினவரே, பாவமும் மரணமுமாகிய இவற்றின் கொடூரத்தின்று எங்களை
விடுதலையாக்கி, உமது
ஆவியானவரின் வழிநடத்துதலினால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட உம்முடைய
இராஜ்ஜியத்திற்கு எங்களைக் கொண்டுவர வேண்டும் என்று, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்
கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
வானத்திலிருக்கிறங்கின
அப்பம் இதுவே. இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப் போலல்ல. அவர்கள்
மரித்தார்களே. இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.
பரி.யோவான் 6.58
கிறிஸ்து
பிறந்த திருநாளுக்கு முன்வரும் 5ம் ஞாயிறு
(வருகையின்
ஞாயிறுக்கு முன்வரும் ஞாயிறு)
Fifth Sunday before Christmas
ஆரம்ப வசனம்
ஜனங்களுக்குக்
கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள். அவருடைய
தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும். ஏசாயா 11.10
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, உமது
சித்தத்தையும் நோக்கத்தையும் அறிவிக்க உமது தீர்க்கர்கள் வழியாகப் பேசினாரே. ஒரு
சிலரின் மெய்யான சாட்சியினால், உலகிலுள்ள உமது பிள்ளைகள் பரிசுத்தவான்களோடு மகிமையில்
ஒன்றாக, உமது
சத்தியத்தின் காவலர்களை ஏவி எழுப்பியருள வேண்டும் என்று,
தமது வல்லமையினாலே மானிடரை இரட்சித்து,
உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே
கடவுளாக இப்பொழுதும ஜீவித்து அரசாளுகிற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை
முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
கர்த்தராகிய
யேகோவா என் பெலனும், என்
கீதமுமானவர். அவரே எனக்கு இரட்சிப்புமானவர். கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்,
அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்.
இது பூமியெங்கும் அறியப்படக் கடவது என்பீர்கள். ஏசாயா 12.2,5
கிறிஸ்து
பிறந்த திருநாளுக்கு முன்வரும் 4ம் ஞாயிறு
வருகையின்
ஞாயிறு
Advant Sunday
ஆரம்ப வசனம்
நித்திரையை
விட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்று. நாம் விசுவாசிகளான போது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்
பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. ரோமர் 13.11
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள தேவனே, உம்முடைய
குமாரனாகிய இயேசுகிறிஸ்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்கச் சிறந்த
மகத்துவத்தோடே திரும்பவரும் கடைசி நாளிளே, நாங்கள் உயிர்த்தெழுந்து சந்திக்க வந்த சாவுக்கீனமாக இந்த
ஜீவகாலத்தில், நாங்கள்
அந்தகாரத்தின் கிரியைகளைத் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துகொள்ள கிருபைசெய்ய வேண்டுமென்று,
உம்மோடும் பரிசுத்த ஆவியோடும்
இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
மனுஷ
குமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு எப்பொழுதும் ஜெபம்
பண்ணி விழித்திருங்கள் என்றார். பரி.லூக்கா 21.36
கிறிஸ்து
பிறந்த திருநாளுக்கு முன்வரும் 3ம் ஞாயிறு
வருகையின்
காலத்தில் 2ம் ஞாயிறு -
Advent 2
ஆரம்ப வசனம்
தேவனுடைய
ராஜ்யம் சமீபமாயிற்று. மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள். பரி.மாற்கு 1.15
சுருக்க ஜெபம்
சகல பரிசத்த
வேதவாக்கியங்களையும் எங்களுக்குப் போதனையாக எழுதுவித்த கிருபையுள்ள கர்த்தாவே,
எங்கள் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின்
மூலமாய்த் தேவரீர் எங்களுக்கு அருளிச்செய்த பாக்கியமுள்ள நித்திய ஜீவ நம்பிக்கையை,
உமது பரிசுத்த வசனத்தால் உண்டாகும்
பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாங்கள் பற்றிக்கொண்டு, எப்பொழுதும் உறுதியாய்க் கைக்கொள்ளும்படி,
அந்த வாக்கியங்களை நன்றாய்க் கேட்டு,
வாசித்து, கவனித்து, கற்றறிந்து, உட்கொள்ள எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென். சங்கீதம்
119.103,
104.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
உம்முடைய
வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள். என் வாய்க்கு அவைகள் தேனிலும்
மதுரமாயிருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன்.
கிறிஸ்து
பிறந்த திருநாளுக்கு முன்வரும் 2ம் ஞாயிறு
வருகையின்
காலத்தில் 3ம் ஞாயிறு -
Advent 3
ஆரம்ப வசனம்
கர்த்தர் வரும்போது
இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி இருதயங்களின் யோசனைகளையும்
வெளிப்படுத்துவார். 1கொரிந்தியர் 4.5
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள கடவுளே, உமது குமாரனின்
வருகைக்கு உமது ஜனத்தை ஆயத்தம் பண்ண உமது உழியக்காரனாகிய யோவான் ஸ்நானகனை
அனுப்பினவரே. உமது குமாரன் மகிமையோடே திரும்ப வரும்போது எங்கள் நியாயதிபதியாகிய
உமது குமாரனுக்கு முன் நாங்கள் நம்பிக்கையோடே நிற்கத்தக்கதாக கீழப்படியாதவர்களின்
இருதயத்தை அன்பின் பிரமாணத்திற்குத் திரும்பும்படி, உமது பணி விடைக்காரரும் உக்கிராணக்காரருமானவர்களை ஏவி
எழுப்பும்படி உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து
அரசாளுகிற ஒரே கடவுளாகிய அவரை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
மெய்யாகவே நான்
சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும். வெளிப்படுத்தல் 22.20
கிறிஸ்து
பிறந்த திருநாளுக்கு முன்வரும் ஞாயிறு
வருகையின்
காலத்தில் 4ம் ஞாயிறு -
Advent 4
ஆரம்ப வசனம்
கர்த்தரின்
மகிமை வெளியரங்கமாகும். மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும். ஏசாயா 40.5
சுருக்க ஜெபம்
பரம பிதாவே,
எங்கள் ஆண்டவரும் இரட்சகருமானவரின்
தாயாராக கிருபை நிறைந்த பரிசுத்த கன்னிமரியம்மாளைத் தெரிந்து கொண்டீரே. நாங்கள்
உமது பரிசுத்த சித்தத்தை ஏற்றுக்கொள்ளவும், அவ்வம்மையாரோடு உமது இரட்சிப்பில் மகிழவும்,
உமது கிருபையினால் எங்களை நிரப்ப
வேண்டுமென்று, எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
இதோ,
ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு
குமாரனைப் பெறுவாள் அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். ஏசாயா 7.14
கிறிஸ்து
பிறந்த திருநாளுக்கு முந்தின தினம் (காலை)
Christmas Eve
ஆரம்ப வசனம்
விடியற்காலத்தில்
கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள். யாத்.16.7
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, உமது
திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வருடந்தோறும் நினைவு கூறுவதினால் நீர்
எங்களை மகிழ்விக்கிறீர். அவரை எங்கள் இரட்சகராக நாங்கள் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுவது
போல், அவர்
நியாயாதிபதியாக வரும்பொழுது, அவரை மெய்யான நம்பிக்கையோடே ஏற்றுக்கொள்ள கிருபை தந்தருள
வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும்
ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
கர்த்தரின்
மகிமை வெளியரங்கமாகும். மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும். ஏசாயா 40.5
கிறிஸ்து
பிறந்த திருநாள்
Christmas Day
ஆரம்ப வசனம்
(இரவில்)
இருளில்
நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் தேசத்தில்
கூடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது. ஏசாயா 9.2
(அதிகாலையில்)
இதோ எல்லா
ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு
அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத்
தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பரி.லூக்கா 2.10,11
(காலையில்)
நமக்கு ஒரு
பாலகள் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். அவர் நாமம் சமாதானப்
பிரபு எனப்படும். எசாயா 9.6
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, பரம இராஜாவே,
உமது திருக்குமாரன் மனுஷத்தன்மையைத்
தரித்துக்கொள்ளவும், கற்புள்ள
கன்னிகையிடத்தில் பிறக்கவும் அவரை இவ்வுலகிற்கு அனுப்பினதற்காக உமக்கு எல்லா
துதியும் உண்டாவதாக. நாங்கள் அவரில் மறுபடியும் பிறந்ததுபோல,
அவர் தொடர்ந்து எங்களில் வாசம் பண்ணவும்,
அவர் பரலோகத்தில் அரசாளுவதுபோல
பூமியிலேயும் அரசாளவும் இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை
முன்னிட்டு வேண்டிக் கொள்ளகிறோம். ஆமென்.
நித்திய கடவுளே,
இந்த மிக பரிசுத்தமான இரவை உம்முடைய ஒரே
மெய்யான ஒளியினால் பிரகாசமாய் ஜொலிக்கப் பண்ணினீரே. உலகில் பிரகாசித்த அந்த ஒளியை
அறிந்திருக்கிற நாங்கள், உம்முடைய பரலோக மகிமையின் பிரகாசத்தைக் காண,
எங்களைக் கொண்டுவர வேண்டும் என்று
எங்கள் ஆண்டராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
(இரவில்)
மேய்ப்பர்கள்
ஒருவரையொருவர் நோக்கி, நாம் பெத்லகேம்
ஊருக்குப் போய், நடந்ததாகக்
கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வருங்கள்
என்றார்கள். பரி.லூக்கா 2.15
(அதிகாலையில்)
அந்த வார்த்தை
மாம்சமாகி, கிருபையினாலும்
சத்தியத்தினாலும் நிறைந்தவராய், உமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய மகிமையைக் கண்டோம்.
பரி.யோவான் 1.14
(பகலில்)
வானத்திலிருந்திறங்கி,
உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே
தேவன் அருளிய அப்பம் என்றார். பரி.யோவான் 6.33
கிறிஸ்து
பிறந்த திருநாளுக்குப் பின்வரும் முதலாம் ஞாயிறு
Sunday after Christmas Day
ஆரம்ப வசனம்
தம்முடைய ஒரே
பேறான குமாரனாலே நாம் பிழைக்கும் படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே
அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. 1யோவான் 4.9
சுருக்க ஜெபங்¢
எல்லாம் வல்ல
கடவுளே, ஆச்சரியமான
பிரகாரமாக மனிதனை உமது சாயலில் சிருஸ்டித்து, இன்னும் அதிக ஆச்சரியமாய் அவனை உமது திருக்குமாரன் இயேசு
கிறிஸ்துவின் மூலம் நீர் திரும்பச் சீர்படுத்தினீர். அவர் எங்கள் மனிதத்தன்மையைத்
தரித்துக் கொண்டதுபோல, நாங்களும்
அவருடைய தெய்வீகத்தன்மையைத் தரித்துக்கொள்ள கிருபை செய்தருள வேண்டும் என்று
உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து
அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
எல்லாம் வல்ல
பிதாவே, உமது
திருக்குமாரன் இயேசு கிறிஸ்து தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்பட்டு,
இஸ்ரவேலுக்கு மகிமையாகவும் எல்லா
தேசங்களுக்கும் ஒளியாகவும் புகழ்ந்து போற்றப்பட்டாரே,
நாங்கள் அவரில் உமக்குப் பிரதிஷ்டை
பண்ணப்படவும், உலகில் உமது
மகிமையைப் பிரதிபலிக்கவும் கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
மரியாளோ அந்தச்
சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து சிந்தனை பண்ணினாள்.
இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் தேவகிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய்
விருத்தியடைந்தார். பரி.லூக்கா 2.19, 52
கிறிஸ்து
பிறந்த திருநாளுக்குப் பின்வரும் 2ம் ஞாயிறு
Christmas 2
ஆரம்ப வசனம்
எல்லா
மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகிற்று. தீத்து 2.11
சுருக்க
ஜெபங்கள்
பரமபிதாவே,
உமது திருக்குமாரன் நாசரேத்தில்,
ஒரு இவ்வுலக குடும்பத்தில் வாழ்க்கை
அனுபவித்தாரே. நாங்கள் அன்பினாலும் கீழ்ப்படிதலினாலும் ஐக்கியப்பட்ட ஒரு பரிசுத்த
குடும்பமாக வாழவும், கடைசியில்
எங்கள் பரமவீட்டில் சேரவும் கிருபை செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
நித்திய கடவுளே,
ஒரு நட்சத்திரத்தின் ஒளியினாலும்
ஞானிகளை வழி நடத்தி அவர்கள் உமது திருக்குமாரனை ஆராதிக்கச் செய்தீரே. உலகமுழுவதும்
உமது மகிமையைக் காணத்தக்கதாக அவருடைய ஒளியினால் இவ்வுலகிலுள்ள சகல தேசங்களையும்
வழி நடத்த வேண்டும் என்று, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்
கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
பிள்ளை
வளர்ந்து, ஆவியிலே பெலன்
கொண்டு, ஞானத்தினால்
நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது. பரி.லூக்கா 2.40
நமது ஆண்டவரின்
பிரசன்னத் திருநாள்
Epiphany of Our Lord
ஆரம்ப வசனம்
எழும்பிப்
பிரகாசி. உன் ஒளி வந்தது. கர்த்தருடைய மகிமை உன் மேல் உதித்தது. ஏசாயா 60.1.
அல்லது
சூரியன்
உதிக்கிற திசை தொடங்கி அது அஸ்தமிக்கிற திசை வரைக்கும் என் நாமம் ஜாதிகளுக்குள்ளே
மகத்துவமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 1.11.
சுருக்க ஜெபம்
நித்திய கடவுளே,
ஒரு நட்சத்திரத்தின் ஒளியினால் ஞானிகளை
வழி நடத்தி அவர்கள் உமது திருக்குமாரனை ஆராதிக்கச் செய்தீரே. உலக முழுவதும் உமது
மகிமையைக் காணத்தக்கதாக, அவருடைய ஒளியினால் இவ்வுலகிலுள்ள சகல தேசங்களையும் வழி
நடத்த வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிதுவை முன்னிட்டு வேண்டிக்
கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
கிழக்கிலே
அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள். பரி.மத்தேயு 2.2
பிரசன்னத்
திருநாளுக்குப் பின்வரும் முதலாம் ஞாயிறு
Epiphany 1
ஆரம்ப வசனம்
வானத்திலிருந்து
ஒரு சத்தம் உண்டாகி இவர் என்னுடைய நேச குமாரன் இவரில் பிரியமாயிருக்றேன் என்று உரைத்தது.
பரி.மத்தேயு 3.17
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, இயேசுவை,
அவருடைய ஞானஸ்நானத்தில் பரிசுத்த
ஆவியினால் அபிஷேகம் செய்து, உமது திருக்குமாரன் என்று வெளிப்படுத்தினவரே. ஜலத்தினாலும்,
ஆவியினாலும் பிறந்த உமது பிள்ளைகளாகிய
நாங்கள் எங்கள் வாழக்கையை உமது உழியத்திற்கென்று ஒப்புக்கொடுத்து,
கடவுளுடைய பிள்ளைகள் என்று
அழைக்கப்படுவதினால் நாங்கள் மகிழ எங்களை ஏவி எழுப்ப வேண்டுமென்று எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
அந்தப்படியே
நான் கண்டு, இவரே தேவனுடைய
குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றார். பரி.யோவான் 1.34
பிரசன்னத்
திருநாளுக்குப் பின்வரும் 2ம் ஞாயிறு
Epiphany 2
ஆரம்ப வசனம்
இயேசு அவர்களை
நோக்கி, என் பின்னே
வாருங்கள், உங்களை
மனுஷனைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். பரி.மாற்கு 1.17
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, உமது
கிருபையினால் மாத்திரம் நாங்கள் உமது ஊழியத்திற்கென்று ஏற்றுக்கொள்ளப்பட்டு
அழைக்கப்படுகிறோம். எங்களை உமது பரிசுத்த ஆவியினால் பலப்படுத்தி,
எங்களுடைய அழைப்புக்குப்
பாத்திரவான்களாக ஆக்கியருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை
முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
ஆண்டவரே,
யாரிடத்தில் போவோம்,
நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில்
உண்டே. பரி.யோவான் 6.68
பிரசன்னத்
திருநாளுக்குப் பின்வரும் 3ம் ஞாயிறு
Epipheny 3
ஆரம்ப வசனம்
இயேசுவைக்
கொண்டு, தேவன்
உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்து அவைகளினாலே
அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். அப்போஸ்தலர் 2.22
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, உமது
இரட்சிப்பின் அன்பை, அடையாளங்கள்
மூலமாகவும், அற்புதங்கள்
மூலமாகவும் உது திருக்கமாரன் வெளிப்படுத்தினாரே, உமது ஜனங்கள் உமது பரலோக கிருபையினால் புதுப்பித்து,
எங்களுடய எல்லா பலவீனத்திலும் உமது
வல்லமையின் சக்தியினால் தாங்கி ஆதரித்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
அவருடைய
மகிமையைக் கண்டோம். அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே
இருந்தது. பரி.யோவான் 1.14
பிரசன்னத்
திருநாளுக்குப் பின்வரும் 4ம் ஞாயிறு
Epiphany 4
ஆரம்ப வசனம்
நீங்கள்
தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும்
அறியாதிருக்கிறீர்களா? 1 கொரிந்தியர் 3.16
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, கிறிஸ்துவில்
நீர் எல்லாவற்றையும் புதிதாக்குகிறீர், உமது கிருபையின் ஐசுவரியத்தால் எங்கள் எளிமையின் தன்மையை மறுரூபமாக்கி
எங்கள் வாழ்க்கை புதிதாக்கப்படுவதால், உமது பரலோக மகிமையை வெளிப்படுத்த வேண்டுமென்று எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
ஜீவனுள்ள
கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும் ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற
மாளிகையாகவும் கட்டப்படுவீர்கள். 1பேதுரு 2.4.5
பிரசன்னத்
திருநாளுக்குப் பின்வரும் 5ம் ஞாயிறு
Epiphany 5
ஆரம்ப வசனம்
எவர்கள்
அழைக்கப் பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவ
ஞானமுமாயிருக்கிறார். 1 கெரிந்தியர் 1.24
சுருக்க ஜெபம்
ஆண்டவரே,
உம்மாலேயன்றி நன்மையானதொன்றையும்
செய்யத் திராணியற்றவர்களாகிய நாங்கள், உமது சித்தத்தின்படி நடக்க உம்மாலே
திராணியுள்ளவர்களாகும்படி, செம்மையானவைகளை எப்பொழுதும் சிந்திக்கவும்,
செய்யவும் தக்க மனதை எங்களுக்குத்
தந்தருள வேண்டுமென்று, எங்கள்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
மறைக்கப்பட்டதுமாயிருந்த
இரகசியமான தேவ ஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுகளில் ஒருவனும்
அறியவில்லை. அறிந்தார்களானால் மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில்
அறையமாட்டார்களே. 1 கொரிந்தியர் 2.7,8.
பிரசன்னத்
திருநாளுக்கப் பின்வரும் 6ம் ஞாயிறு
Epiphany 6
ஆரம்ப வசனம்
அவர்கள்
கேட்டறியும் திராணிக்குத் தக்கதாக அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச்
சொன்னார். அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது அவர்களுக்கு எல்லாவற்றையும்
விவரித்துச் சொன்னார். பரி.மாற்கு 4.33,34
சுருக்க ஜெபம்
கடவுளே
பிசாசினுடைய கிரியைகளை அழிக்கவும், எங்களைக் கடவுளுடைய புத்திரரும் நித்திய ஜீவ சுதந்தரரும்
ஆக்கவும், உமது
திருக்குமாரனைப் பிரசன்னமாகும்படி செய்தீரே. இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கிற
நாங்கள் அவர் வல்லமையோடும் மகா மகிமையோடும் மறுபடியும் பிரசன்னமாகும்போது,
அவருடைய மகிமையுள்ள நித்திய
ராஜ்ஜியத்தில் அவருக்கு ஒப்பானவர்களாகும் பொருட்டு, அவர் சத்தமுள்ளவராய் இருக்கிறதுபோல நாங்களும் எங்களைச்
சுத்திகரித்துக் கொள்ளும்படி எங்களுக்குக் கிருபை செய்ய வேண்டுமென்று,
பிதாவாகிய தேவரீரோடும் பரிசுத்த
ஆவியாகிய தேவரீரோடும், ஒரே கடவுளாக
என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளுகிற அவர் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
பரலோக
ராஜ்ஜியத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. பரி.மத்தேயு 13.11
கிறிஸ்து
உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 9ம் ஞாயிறு
(லெந்து
காலத்திற்கு முன்வரும் 3ம் ஞாயிறு)
Ninth Sunday before Easter
ஆரம்ப வசனம்
கர்த்தருடைய
வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி,
சத்தியமும்,
பேதையை ஞானியாக்குகிறது மாயிருக்கிறது.
சங்கீதம் 19.7
சுருக்க ஜெபம்
நித்திய கடவுளே,
மானிடருக்கு உமது திருக்குமாரனாகிய
இயேசு கிறிஸ்து வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறாரே. நாங்கள் அவருடைய வழியில்
நடக்கவும், அவருடைய
சத்தியத்தில் மகிழவும் அவருடைய உயிர்தெழுந்த ஜீவனில் பங்குபெறவும் கிருபை செய்தருள
வேண்டும் என்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொதும்
ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
இயேசு
அதிகாரமுடையராய் அவர்களுக்குப் போதித்த படியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
பரி.மத்தேயு 7.28,29
(லெந்துக்கு முந்திய 4வது
ஞாயிறு)
ஆரம்ப வசனம்:
ஆகிலும்
யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக்
கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார். 1 கொரிந்தியர் 1.24
சுருக்க ஜெபம்:
நாங்கள் சகல நியாயமான காரியங்களையும் செய்யும்
சிந்தையையும் தந்நருள வேண்டுமென்று வேண்டுகிறோம். நீரேயன்றி உமது பரிசுத்த
சித்தத்தின் படி எங்களால் ஜீவிக்க முடியாது. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் ஜெபிக்கிறோம்.
ஆமென்.
நற்கருணைக்குப்
பிந்திய வசனம்:
உலகத் தோற்றத்திற்குமுன்னே
தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே
பேசுகிறோம். 1 கொரிந்தியர் 2.7
EIGHT SUNDAY BEFORE EASTER
(லெந்து காலத்திற்கு முன்வரும் 2ம் ஞாயிறு)
ஆரம்ப வசனம்
கர்த்தராகிய
தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை
அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக்
காயம் கட்டினார். ஏசாயா 61.1
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
நித்திய கடவுளே, உமது
திருக்குமாரன் இயேசு கிறிஸ்து வியாதியஸ்தரைக் குணமாக்கி,
வாழ்க்கையின் பூரணத்துவத்தை மீண்டும்
அவர்களுக்கு அளித்தாரே. இவ்வுலகத்தின் கொடுந்துயரத்தை உமது மிகுந்த இரக்கத்தினால்
கண்ணோக்கிப் பார்த்து, சுகமளிக்கும்
உமது வல்லமையினால், மானிடரையும்
தேசங்களையும் பூரணமாக்க வேண்டும் என்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக
இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு
கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்
பரி.நற்ருணைக்குப்
பின்வரும் வசனம்
எல்லாவற்றையும்
நன்றாய்ச் செய்தார். செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் பண்ணுகிறார். பரி.மாற்கு 7.37
கிறிஸ்து
உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 7ம் ஞாயிறு
(லெந்து
காலத்திற்கு முன்வரும் முதலாம் ஞாயிறு)
Seventh Sunday before Easther
ஆரம்ப வசனம்
கர்த்தர்
இரக்கமும் மன உருக்கமும் உள்ளவர். அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளில்
மேலுமுள்ளது. சங்கீதம் 145.8-9
சுருக்க ஜெபம்
இரக்கமுள்ள
ஆண்டவரே, உம்மிடத்தில்
விசுவாசமாயிருக்கிற ஜனமாகிய நாங்கள் சகல பாவங்களும் அறச்
சுத்திகரிபக்கப்படுவதற்கும், அமைதலான மனதோடு உமக்கு ஊழியஞ்செய்வதற்கும்,
எங்களுக்குப் பாவமன்னிப்பையும்
சமாதானத்தையும் அருளிச் செய்ய வேண்டுமென்று எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
மனந்திரும்புங்கள்.
அப்பொழுது பிழைப்பீர்கள். சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல் 18.32
சாம்பற்
புதன்கிழமை
Ash Wednesday
ஆரம்ப வசனம்
தேவனுக்கேற்கும்
பலிகள் நொறுங்குண்ட ஆவிதான். நொறுங்குண்டதும் நருங்கண்டதுமான இருதயத்தை நீர்
புறக்கணியீர். சங்கீதம் 51.17
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள நித்திய பராபரனே, தேவரீர் சிருஷ்டித்தவைகளில் ஒன்றையும் பகையாதவரும்,
தங்கள் பாவங்களினிமித்தம்
மதஸ்தாபப்படுகிற யாவருக்கும் மன்னிக்கிற வருமாயிருக்கிறீர். எங்களுடைய பாவங்களைக் குறித்து
நாங்கள் துக்கித்துப் புலம்பி, எங்கள் நிர்ப்பாக்கியத்தை அறிக்கையிட்டு சம்பூரண இரக்கமுள்ள
தேவரீரிடத்தில் குறைவற்ற பாவ விமோசனத்தையும் மன்னிப்பையும் பெறத்தக்கதாக,
எங்களுக்குள்ளே நொறுங்குண்ட புதிதான
இருதயத்தைச் சிருஷ்டிக்க வேண்டுமென்று, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய்
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
இரவும் பகலும்
அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தன் காலத்தில் தன்
கனியைத் தருவான். சங்கீதம் 1.2,3
லெந்து
காலத்தில் முதலாம் ஞாயிறு
(கிறிஸ்து
உயிர்த்தெபந்த பண்டிகைக்கு முன்வரும் 6ம் ஞாயிறு)
Lent 1
ஆரம்ப வசனம்
இயேசு
வனாந்தரத்திலே நாற்பது நாள் இருந்து சாத்தானால் சோதிக்கப்பட்டு அங்கே காட்டு
மிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக் கொண்டிருந்தார். தேவ தூதர்கள் அவருக்கு ஊழியஞ்
செய்தார்கள். பரி.மாற்கு 1.13
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, உமது
திருக்குமாரனாகிய இயேசு கிறிஸ்து வனாந்தரத்தில் நாற்பது நாட்களாய் உபவாசித்து,
எங்களைப்போல சோதிக்கப்பட்டும்,
பாவஞ்செய்யாமல் இருந்தாரே. உமது
ஆவிக்குக் கீழப்படியத் தக்கதாக எங்கள் வாழ்க்கையை நாங்கள் ஒழுங்குபண்ணி,
நீர் எங்கள் பலவீனத்தை அறிவதுபோல,
இரட்சிக்கும் உமது வல்லமையை நாங்கள்
அறியவும் கிருபை தந்தருள வேண்டும் என்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை
முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்கப்
பின்வரும் வசனம்
மனுஷன்
அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு
வார்த்தையினாலும் பிழைப்பான். பரி.மத்தேயு 4.4
லெந்து
காலத்தில் 2ம் ஞாயிறு
(கிறிஸ்து
உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முனவரும் 5ம் ஞாயிறு)
Lent 2
ஆரம்ப வசனம்
எங்கள்
தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும், மன்னிப்புகளும் உண்டு. என்றபோதிலும் அவருக்கு விரோதமாக
நாங்கள் கலகம் பண்ணினோம். தானியேல் 9.9,10
சுருக்க ஜெபம்
ஆண்டவரே,
உலகத்தினாலும் மாம்சத்தினாலும்
பிசாசினாலும் நேரிடும் சோதனைகளுக்கு எதிர்த்து நிற்கவும்,
சுத்த இருதயத்தோடும் சுத்த மனதோடும் ஒரே
தேவனாகிய உம்மைப் பின்பற்றி நடக்கவும், உம்முடைய ஜனமாகிய எங்களுக்குக் கிருபை தந்தருள வேண்டுமென்று,
எங்கள் ஜனமாகிய எங்களுக்குக் கிருபை
தந்தருள வேண்டுமென்று, எங்கள்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்,
பரி.நற்ருனைக்குப்
பின்வரும் வசனம்
உம்முடைய
முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று. உமது முகத்தை
எனக்கு மறையாதேயும். சங்கீதம் 27.8,9
லெந்து
காலத்தில் 3ம் ஞாயிறு
(கிறிஸ்து
உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 4ம் ஞாயிறு)
Lent 3
ஆரம்ப வசனம்
தேவனுக்கேற்கும்
பலிகள் நொறுங்குண்ட ஆவிதான். நொறுங்குண்டதும், நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். சங்கீதம் 51.17
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, உமது மிகுந்த
அன்புள்ள குமாரன் மகிழவடையுமுன், முதலில் பாடுபட்டு, மகிமையினுள் பிரவேசிக்கும் சிலுவையின் மரணத்தை
உத்தரித்தாரே. நாங்கள் சிலுவையின் பாதையில் நடந்து, அது ஜீவனுக்கும் சமாதானத்திற்கும் வழி என்பதைக் கண்டு கொள்ள
இரக்கமாய்க் கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை
முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
எனக்கு நேரிட்ட
சோதனைகளில் என்னோடே நிலைத்திருந்தவர்கள் நீங்களே. நீங்கள் என் ராஜ்ஜியத்திலே என்
பந்தியில் போஜனபானம் பண்ணுவீர்கள் என்று இயேசு கூறினார். பரி.லூக்கா 22.28.30
லெந்து
காலத்தில் 4ம் ஞாயிறு
(கிறிஸ்து
உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 3ம் ஞாயிறு)
Lent 4
ஆரம்ப வசனம்
இயேசு
வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம். 1 யோவான் 3.2
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
பிதாவே, உமது
திருக்குமாரன் சிலுவையில் மரணத்தை உத்தரிக்குமுன் அவருடைய மகிமையில்
வெளிப்படுத்தப்பட சித்தங் கொண்டீரே, நாங்கள் அவரோடே கூட பாடு அனுபவிக்க
பலப்படுத்தப்பட்டவர்களாய் மகிமையின் மேல் மகிமையடைந்து,
அவருடைய சாயலில் மறுரூபமாகத்தக்கதாக
அவருடைய மகிமையை உணர்ந்து கொள்ள எங்களுக்கு விசுவாசத்தை அருள வேண்டுமென்று
உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து
அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
இவர் என்னுடைய
நேச குமாரன், இவரில்
பிரியமாயிருக்கிறேன், இவருக்குச்
செவிகொடுங்கள். பரி.மத்தேயு 17.5
லெந்து
காலத்தில் 5ம் ஞாயிறு
(கிறிஸ்து
உயிர்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 2ம் ஞாயிறு)
Lent 5
ஆரம்ப வசனம்
பிழைத்திருக்கிறவர்கள்
இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல் தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று
பிழைத்திருக்கும்படி அவர் எல்லாருக்காகவும் மரித்தார். 2 கொரி.5-15
சுருக்க ஜெபம்
மிகவும்
இரக்கம் நிறைந்த கடவுளே, உமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாயும்
உயிர்த்தெழுதலின் மூலமாயும் மானிடரை இரட்சித்து, விடுதலை பண்ணினீரே, சிலுவையில் பாடு அனுபவித்த அவர் மேலுள்ள விசுவாசத்தின்
மூலமாய் நாங்கள் அவருடைய வெற்றியின் வல்லமையினால் வெற்றிபெற கிருபை அருள வேண்டும்
என்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம்.
ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
கோதுமைமணியானது
நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக்
கொடுக்கும். பரி.யோவான் 12.24
குருத்தோலை
ஞாயிறு
(கிறிஸ்து உயிர்த்தெழுந்த
திருநாளுக்கு முன்வரும் ஞாயிறு)
Palm Sunday
ஆரம்ப வசனம்
தாவீதின்
குமாரனுக்கு ஓசன்னா. கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.
உன்னதத்திலே ஓசன்னா. பரி.மத்தேயு 21.9
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள நித்திய தேவனே, மனிதரிடத்தில் உருக்கமாய் அன்பு கூர்ந்த தயவுள்ள பிதாவே,
உமது குமாரனும் எங்கள் இரட்சகருமாகிய
இயேசு கிறிஸ்து காட்டிய மகா தாழ்மையை எல்லா மனிதரும் பின்பற்றும்படி அவர் எங்கள்
மாம்சதேகத்தைத் தரித்துக்கொள்ளவும் சிலுவையில் மரணத்தை உத்தரிக்கவும் அவரை
அனுப்பினீரே. அவர் காட்டிய பொறுமையை நாங்கள் பின்பற்றி நடக்கவும்,
அவருடைய உயிர்த்தெழுதலில்
பங்குள்ளவர்களாகவும், எங்கள்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் கிருபை செய்தருளும். ஆமென்
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
என் பிதாவே,
இந்தப் பாத்திரத்தில் நான் பானம்
பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாது, உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
பரி.மத்தேயு 26.42
கட்டளை வியாழன்
Maundy Thursday
ஆரம்ப வசனம்
நான் உங்களில்
அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான
கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன் என்று இயேசு கூறினார். பரி.யோவான் 13.34
சுருக்க
ஜெபங்கள்
எல்லாம் வல்ல
பரமபிதாவே, உமது
திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் ஞாபகார்த்தமாய் இந்த ஆச்சரியமான
சாக்கிரமெந்தை எங்களுக்கு நீர் அருளினதற்காக உமக்குத் தோத்திரம் செலுத்துகிறோம்.
அவருடைய திருச்சரீரமும், இரத்தமுமாகிய பரிசுத்த இரகசியங்களைப்பக்தி வினயத்தோடு
ஆசரித்து, அவருடைய
மீட்பினால் உண்டான கனிகளை நாங்கள் எங்களுக்குள் உணர்ந்து,
அவற்றை எங்கள் வாழக்கையில் காட்ட
அருள்புரிய வேண்டுமென்று, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும்
எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
என் கண்கள்
எப்பொழுதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது. அவரே என் கால்களை வலைக்கு
நீங்கலாக்கிவிடுவார். என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும். நான் தனித்தவனும்
சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன். சங்கீதம் 25.15,16
பெரிய வௌ¢ளிக்கிழமை
Good Friday
ஆரம்ப வசனம்
நாம்
பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது
அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5.8
சுருக்க
ஜெபங்கள்
சர்வ
வல்லமையுள்ள தேவனே, எங்கள்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், தேவரீருடைய வீட்டாராகிய எங்களுக்காகக்
காட்டிக்கொடுக்கப்படவும், அக்கிரமக்காரருடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும்
சிலுவையில் மரணமடையவும மனதாரச சம்மதித்ததினிமித்தம், எங்களைக் கிருபையோடே கண்ணோக்கிப் பார்க்க வேண்டுமென்று,
உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே
தேவனாக என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம்.
ஆமென்
சர்வ வல்லமையுள்ள
அநாதி தேவனே, திருச்சபையாகிய
சரீரம் முழுவதையும் உம்முடைய ஆவியினாலே ஆண்டு பரிசுத்தமாக்கிக் கொண்டு வருகிறீர்.
அதன் அவயவங்களாகிய ஒவ்வொருவரும் தான் அழைக்கப்பட்டிருக்கிற நிலைமையிலும்
பணிவிடையிலும் உண்மையாயும் பக்தியாயும் உம்மைச் சேவிக்கும்படி உம்முடைய பரிசுத்த
சபையிலுள்ள எவ்வகையானவர்களுக்காகவும் நாங்கள் உமது சந்ததியில் செய்கிற
விண்ணப்பங்களையும் ஜெபங்களையும், எங்கள் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிதுவினிமித்தம்
ஏற்றுக்கொண்டருளும். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
ஆகையால்
நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர்
வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 1 கொரிந்தியர் 11.26
கிறிஸ்து
உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்தினம்
தொங்கவிடப்பட்ட
எல்லா திரைகளும் நீக்கப்பட வேண்டும்
Easter Eve
ஆரம்ப வசனம்
ஆண்டவரே,
உமது பிரியமுள்ள குமாரனும் எங்கள்
இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிற
நாங்கள் எங்கள் கெட்ட இச்சைகளை இடைவிடாமல் அழித்துவருகிறதினாலே,
அவரோடே அடக்கம் பண்ணப்படவும்,
கல்லறையை மரண வாசலையும் கடந்து
சந்தோஷமுள்ள உயிர்த்தெழுதலை அடையவும் எங்களுக்காக மரித்து,
அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்த
உம்முடைய குமாரனும் எங்கள் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின்
புண்ணியங்களினிமித்தம் கிருபை செய்தருளும். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
இயேசு
அவர்களுக்குப் பிரதியுத்தரமாக இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள்,
மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்
என்றார். பரி.யோவான் 2.19
கிறிஸ்து
உயிர்த்தெழுந்த திருநாளாகிய
ஈஸ்தர் பண்டிகை
நம்முடைய
பஸ்காவாகிய கிறிஸ்து, நமக்காக
அடிக்கப்பட்டிருக்கிறாரே.
ஆதலால்,
பழைய புளித்த மாவோடே அல்ல,
துர்க்குணம்,
பொல்லாப்பு என்னும் புளித்த மாவோடும்
அல்ல, துப்புரவு,
உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே
பண்டிகையை ஆசரிக்கக் கடவோம். 1கொரி.5.7
மரித்தோரிலிருந்து
எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை. மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
அவர் மரித்தது,
பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார்.
அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
அப்படியே
நீங்களும் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்காளகவும் நம்முடைய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்
கொள்ளுங்கள். ரோமர் 6.9
கிறிஸ்து மரித்தோரிலிருந்து
எழுந்த நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
மனுஷனால் மரணம்
உண்டானபடியால் மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
ஆதாமுக்குள்
எல்லாரும் மரிக்கிறதுபோல கிறிஸ்துவுக்குள் எல்லாம் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 1கொரி.15.20
பிதாவுக்கும்
குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.
ஆதியிலும்
இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
கிறிஸ்து
உயிர்த்தெழுந்த திருநாள்
Easter Day
ஆரம்ப வசனம்
அதிகாலையில்
வாரத்தின்
முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது, அவர்கள் கல்லறையினிடத்திற்கு வந்தார்கள். அல்லேலூயா.
பரி.மாற்கு 16.2
காலையில்
வாரத்தின்
முதலாம் நாள் அதிகாலையில் சீஷர்கள் கல்லறையினிடத்தில் வந்தார்கள். கல்லறையில்
அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்
பட்டிருக்கிறதைக் கண்டார்கள். அல்லேலூயா. பரி.லூக்கா 24.1
மாலையில்
வாரத்தின்
முதல் நாளாகிய அன்றையதினம் சாயங்கால வேலையில் சீஷர்கள் கூடியிருந்த இடத்திலே இயேசு
வந்து நடுவே நின்று உங்களுக்குச் சமாதானம் என்றார். அல்லேலூயா பரி.யோவான் 20.19
சுருக்க
ஜெபங்கள்
சர்வ
வல்லமையுள்ள தேவனே, உம்முடைய
ஏகசுதனாகிய இயேசு கிறிஸ்துவினால் மரணத்தை ஜெயித்து, நித்திய ஜீவவாசலைத் திறந்தீரே,
எங்களுக்கு முன் செல்லும் உமது
விசேஷித்த கிருபையினால் தேவரீர் எங்கள் மனதில் நல்விருப்பங்களை உண்டுபண்ணுகிறதுபோல,
இடைவிடாமல் துணை நிற்கும் கிருபையினால்
அவ்விருப்பங்கள் நற்கிரியைகளாய்ப் பயன்படும்படி கிருபை செய்ய வேண்டுமென்று,
உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே
தேவனாக என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளுகிற எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின்
மூலமாய்த் தாழ்மையோடே வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
தேவனே,
எங்கள் மீட்புக்கென்று சிலுவையில்
மரணமடைய உமது ஒரேபேறான குமாரனைத் தந்தருளி அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலினால்
எங்கள் சத்துருவின் வல்லமையினின்று எங்களை இரட்சித்தருளினீரே,
நாங்கள் அவருடைய உயிர்த்தெழுதலில்
பங்குள்ளவர்கயாய் எப்பொழுதும் சந்தோஷத்துடன் அவரோடு ஜீவிக்ககத்தக்கதாகத்
தினந்தோறும் பாவத்துக்கு மரிக்க எங்களுக்குக் கிருபை செய்தருள வேண்டுமென்று,
எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
மூலமாய் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
நம்முடைய
பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே,
ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல,
துர்க்குணம் பொல்லாப்பு என்னும்
புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு
உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். அல்லேலூயா. 1கொரி. 5.7,8
கிறிஸ்து
உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் முதலாம் ஞாயிறு
Easter 1
ஆரம்ப வசனம்
முதல் வருடம்
சீஷர்கள்
கூடியிருந்த இடத்தில் இயேசு வந்து நடுவே நின்று 'உங்களுக்குச் சமாதானம்' என்றார். அல்லேலூயா. பரி.யோவான் 20.19
இரண்டாம்
வருடம்
குமாரனைக்
கண்டு அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் நித்திய ஜீவனை அடைவதும்,
நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும்
என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். அல்லேலூயா. பரி.யோவன் 6.40
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
பிதாவே, உமது மிகுந்த
இரக்கத்தினாலும் உயிர்த்தெழுந்த ஆண்டவரின் தரிசனத்தினாலும் சீஷர்களை
மகிழ்வித்தவரே. எங்களோடிருக்கும் அவருடைய பிரசன்னத்தை அறிவதின் மூலம் அவருடைய
உயிர்த்தெழுந்த வாழக்கையினால் நாங்கள் பலப்படவும், தாங்கப்படவும், நீதியிலும் சத்தியத்திலும் உம்மை இடைவிடாது சேவிக்கவும்
கிருபை தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய்
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
நீங்கள்
வளரும்படி, புதிதாய்ப்
பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல்
வாஞ்சையாயிருங்கள். அல்லேலூயா. 1 பேதுரு 2.3
இயேசு அவர்களை
நோக்கி, ஜீவ அப்பம்
நானே, என்னிடத்தில்
வருகிறவன் ஒருகாலும் பசியடையான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருகாலும்
தாகமடையான். அல்லேலூயா. பரி.யோவன் 6.35
கிறிஸ்து
உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் இரண்டாம் ஞாயிறு
Easter 2
ஆரம்ப வசனம்
முதல் வருடம்
மோசே முதலிய
சகல தீர்க்க தரிசிகளும் எழுதின வேத வாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்
குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அல்லேலூயா
பரி.லூக்கா 24.27
இரண்டாம்
வருடம்
நானே நல்ல
மேய்ப்பன். நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்,
என்று இயேசு சொன்னார். அல்லேலூயா.
பரி.யோவான் 10.14,15
சுருக்க ஜெபம்
சமாதானத்தின்
கடவுளே, நித்திய
உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான எங்களுடைய கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணினவரே,
உமக்குப் பிரியமானதை எங்களில்
நடப்பித்து, நாங்கள் உம்முடைய
சித்தத்தின்படிச் செய்ய எங்களைச் சகலவித நற்கிரியைகளிலும் சீர்பொருந்தினவர்களாக்க
வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.
ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
வழியில்
நடந்தவைகளையும், அவர்
அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
அல்லேலூயா. பரி.லூக்கா 24.35
திருடன்
திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ
அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். அல்லேலூயா. பரி.யோவான் 10.10
கிறிஸ்து
உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் மூன்றாம் ஞாயிறு
Easter 3
ஆரம்ப வசனம்
முதல் வருடம்
இயேசு
மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு, திபேரியா கடற்கரையில் மறுபடியும் சீஷர்களுக்குத் தம்மை
வெளிப்படுத்தினார். அல்லேலூயா பரி.யோவான் 21.1
இரண்டாம்
வருடம்
''நானே
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்'' என்று இயேசு சொன்னார். அல்லேலூயா. பரி.யோவான் 11.25
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, உமது குமாரன்
இயேசு கிறிஸ்து தம்மிடத்தில் நம்பிக்கை வைக்கிற யாவருக்கும் உயிர்த்தெழுதலும்,
ஜீவனுமாயிருக்கிறாரே,
எங்களைப் பாவத்தின் மரணத்தினின்று
நீதியின் வாழ்வுக்கு எழுப்புவதின் மூலம் நாங்கள் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும்
சதாகாலங்களிலும் ஜீவித்து அரசாளுகிற அந்த மேலான இடத்திற்குரியவைகளை நோக்கி கிருபை
செய்தருள வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
இயேசு அவர்களை
நோக்கி வாருங்கள், போஜனம்
பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில்
ஒருவனும் நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. அப்பொழுது இயேசு வந்து,
அப்பத்தையும் மீனையும் எடுத்து
அவர்களுக்குக் கொடுத்தார். அல்லேலூயா. பரி.யோவான் 21.12,13
பூமியிலுள்ளவைகளையல்ல,
மேலானவைகளையே நாடுங்கள் ஏனென்றால்,
நீங்கள் மரித்தீர்கள். உங்கள் ஜீவன்
கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. அல்லேலூயா. கொலோசெயர் 3.2.3
கிறிஸ்து
உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் நான்காம் ஞாயிறு
Easter 4
ஆரம்ப வசனம்
முதல் வருடம்
அவரை நீங்கள்
காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்பு கூருகிறீர்கள். இப்பொழுது அவரைத்
தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற
சந்தோஷமுள்ளவர்களாய்க் களி கூருகிறீர்கள். அல்லேலூயா. 1பேதுரு 1.8
இரண்டாம்
வருடம்
இயேசு நானே
வழியும், சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன் என்றார். அல்லேலூயா. பரி.யோவான் 14.6
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, பாவிகளுடைய
அடங்காத சித்தத்தையும் ஆசாபாசங்களையும் அடக்கி ஆளுகிறவரே. பலவிதமான மாறுதல்களுள்ள
இவ்வுலகத்தில் நாங்கள் இருக்கையில் எங்கள் இருதயம் நீடிய சந்தோஷமுள்ள மேலுலகத்தைப்
பற்றிக்கொண்டு, உறுதியாய்
நிலைத்திருக்கும்படி, நீர்
கற்பித்தவைகளை நாங்கள் நேசிக்கவும் நீர் வாக்குத் தத்தம் பண்ணினவைகளை விரும்பவும்
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் எங்களுக்குக் கிருபை செய்தருளும்.
ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
இதோ,
வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்.
ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், அவரிடத்தில் நான் பிரவேசித்து,
அவனோடே போஜனம் பண்ணுவேன். அவனும்
என்னோடு போஜனம் பண்ணுவான். அல்லேலூயா. வெளி.3.20
கிறிஸ்து
உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் ஐந்தாம் ஞாயிறு
Easter 5
ஆரம்ப வசனம்
கர்த்தர்
தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டார் என்று சொல்லுங்கள். கெம்பீர சத்தமாய்
பூமியின் கடையாந்தர மட்டும் வெளிப்படுத்துங்கள். அல்லேலூயா. ஏசாயா 48.20
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
நித்திய கடவுளே, நாங்கள் ஜெபம்
பண்ணும் முன்னே எங்கள் ஜெபத்தைக் கேட்க ஆயத்தமாயிருக்கிறீர். நாங்கள்
விரும்புகிறதிலும், பெறத்தக்கதிலும்
அதிகமாய்க் கொடுத்துவருகிறீர். எங்கள் மேல் உமது இரக்கத்தைச் சம்பூரணமாய்ப்
பொழிந்தருளி, எங்கள் மனச்
சாட்சிக்குப் பயமுண்டாக்குகிற குற்றங்களை மன்னித்து, உமது குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின்
புண்ணியத்தினாலும், மத்தியஸ்தத்தினாலும்
மாத்திரம் கேட்டுக்கொள்ளக் கூடிய நன்மைகளை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
பரி.நற்கருணைக்கப்
பின்வரும் வசனம்
நான்
பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன். மறுபடியும் உலகத்தைவிட்டுப்
பிதாவினிடத்திற்குப் போகிறேன். என்றார். அல்லேலூயா. பரி.யோவான் 16.28
கிறிஸ்து
பரத்துக்கேறின திருநாள்
Ascension Day
ஆரம்ப வசனம்
வானங்களின்
வழியாய்ப் பரலோகத்திற்குப் போன தேவ குமாரனாகிய இயேசு என்னும் மகாபிரதான ஆசாரியர்
நமக்கு இருக்கிறார். அல்லேலூயா. எபி.4.14
அல்லது
இயேசு தம்முடைய
கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்துபோனார். அல்லேலூயா. பரி.லூக்கா 24.50,
51
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள தேவனே, உமது ஒரே பேறான
குமாரனும், எங்கள்
கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்து எழுந்தருளிப் போனதை விசுவாசிக்கிற நாங்கள்
இருதயத்தினாலும் மனதினாலும் அவ்விடத்துக்கேறி, அவரோடே இடைவிடாமல் வாசமாயிருக்கும்படி கிருபை செய்ய வேண்டுமென்று
ஒரே தேவனாக என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு உம்மை
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
நான்
உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைகொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்
பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவு
பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
அல்லேலூயா. 1.11.
கிறிஸ்து
பரமேறிய திருநாளுக்குப் பின்வரும் ஞாயிறு
(கிறிஸ்து
உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் 6ம் ஞாயிறு)
The Sunday after Ascension Day (Easter 6)
ஆரம்ப வசனம்
நீங்கள் ஏன்
வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக
வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ அப்படியே மறுபடியும் வருவார். அல்லேலுயா.
அப்போஸ்தலர் 1.11
அல்லது
வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப் போன தேவ குமாரனாகிய இயேசு என்னும் மகா
பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார். அல்லேலூயா. எபி.4.14
சுருக்க ஜெபம்
மகிமையின்
இராஜாவாகிய தேவனே, உம்முடைய ஏக
சுதனாகிய இயேசு கிறிஸ்துவை, மிகுந்த வெற்றிச் சிறப்போடு உமது பரமராஜ்யத்துக்கு
எழுந்தருளச் செய்தீரே. எங்களைத் திக்கற்றவர்களாய் விடாமல்,
எங்களைத் தேற்றும்படி உம்முடைய பரிசுத்த
ஆவியை எங்களிடத்திற்கு அனுப்பி, எங்கள் இரட்சகராகிய கிறிஸ்து முந்திப் போயிருக்கிற
அவ்விடத்திற்கே எங்களையும் உயர்த்தி அருளவேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த
ஆவியோடும் ஒரே தேவனாக என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
அவர்கள் அவரைப்
பணிந்துகொண்டு, மிகுந்த
சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து, நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்
கொண்டிருந்தார்கள். ஆமென். பரி.லூக்கா 24.52, 53
பரிசுத்த
ஆவியின் திருநாள்
(பெந்தெகொஸ்தே
திருநாள்)
Pentecost (Whit Sunday)
ஆரம்ப வசனம்
நமக்கு
அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில்
ஊற்றப்பட்டிருக்கிறது. அல்லேலூயா. ரோமர் 5.5
அல்லது
பரிசுத்த ஆவி
உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்.
அல்லேலூயா. அப். 1.8
சுருக்க
ஜெபங்கள்
தேவனே
இதைப்போலொத்த ஓர் காலத்தில் உம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்பி,
அவருடைய ஒளியினாலே விசுவாசமுள்ள
உம்முடைய ஜனத்தின் இருதயங்களைப் போதித்துப் பிரகாசிப்பித்தீரே. அந்த ஆவியினாலே
நாங்கள் எல்லாக் காரியங்களையும் குறித்து நிதானமாய் யோசிக்கவும்,
அவருடைய பரிசுத்த தேற்றரவினாலே
இடைவிடாமல் சந்தோஷிக்கவும் கட்டளையிட வேண்டுமென்று, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே தேவனாகச் சதாகாலமும்
ஜீவித்து அரசாளுகிற எங்கள் இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவின் புண்ணியங்களினிமித்தம்
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
எல்லாம் வல்ல
கடவுளே, பெந்தெகொஸ்தே
நாளிலே வானத்திலிருந்து இறங்கிய காற்றோடும் அக்கினிமயமாக நாவுகளோடும் உமது
பரிசுத்த ஆவியை, சீஷர்கள் மேல்
அனுப்பி அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரஸ்தாபிக்க அவர்களைச்
சந்தோஷத்தினாலும் தைரியத்தினாலும் நிரப்பினீரே. உமது சந்தியத்திற்குச் சாட்சியாய்
இருக்கவும் எல்லா மனிதர்களையும் உமது அன்பின் அனலால் இழுத்துக்கொள்ளவும் உமது
பரிசுத்த ஆவியின் வல்லமையினால் எங்களை அனுப்பியருளும். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
அவர்களெல்லாரும்
பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு
பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக் கேட்கிறோமே என்றார்கள்.
அல்லேலூயா. அப்போஸ்தலர் 2.4, 11
திருத்துவத்
திருநாள்
(பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் முதலாம் ஞாயிறு)
Trinity Sunday (Pentecost 1)
ஆரம்ப வசனம்
இருந்தவரும்
இருக்கிறவரும் வருகிறவருமாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர். வெளி.4.8
சுருக்க
ஜெபங்கள்
சர்வ
வல்லமையுள்ள நித்திய தேவனே, மெய்விசுவாசத்தைப் பற்றிக் கொண்டு மகிமை பொருந்திய நித்திய
திரித்துவத்தை அறிக்கையிடவும் வல்லமை பொருந்திய திவ்விய மகத்துவத்தை ஏகத்துவமாக
வணங்கவும் உமது அடியாராகிய எங்களுக்குக் கிருவை செய்திருக்கிறீரே. இந்த
விசுவாசத்திலே எங்களை உறுதிப்படுத்தி இதற்கு விரோதமான யாவற்றிற்கும் எப்பொழுதும்
எங்களை விலக்கிக் காப்பாற்ற வேண்டுமென்று, சதாகாலமும் ஒரே தேவனாக ஜீவித்து அரசாளுகிற உம்மை வேண்டிக்
கொள்ளுகிறோம். ஆமென்.
எல்லாம் வல்ல
நித்திய கடவுளே, நீர்
பிதாவாகவும் குமாரனாகவும், தூய ஆவியாகவும் உம்மை வெளிப்படுத்தி,
அன்பின் பூரண ஒற்றுமையால் இணைக்கப்பட்டு,
என்றும் ஜீவித்து அரசாளுகிறீர்.
இப்பொழுதும் எப்பொழுதும் களிகூறவும், இந்த விசுவாசத்தில் எங்களை நிலைநிறுத்தியருள வேண்டும் என்று
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
மேலும் நீங்கள்
புத்திரராயிருக்கிறபடியினால், 'அப்பா பிதாவே’ என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது
குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். கலாத்தியர் 4.6
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 2ம் ஞாயிறு
(திரித்துவத்
திருநாளுக்குப் பின்வரும் முதலாம் ஞாயிறு)
2nd Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
முதல் வருடம்
எல்லாரும் ஒரே
ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு எல்லாரும் ஒரே
ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். 1கொரி.12.13
இரண்டாம்
வருடம்
நீங்களும்
எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்.
எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும்
இருக்கிறது. 1யோவான் 1.3
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
நித்திய கடவுளே, திருச்சபையாகிய
உமது சரீரம் முழுவதையும் உம்முடைய ஆவியினாலே ஆண்டு பரிசுத்தமாக்கிக் கொண்டு
வருகிறீர். அதின் அவயவங்களாகிய ஒவ்வொருவரும் தாங்கள் அழைக்கப்பட்டிருக்கிற
நிலைமைகளிலும் பணிவிடையிலும் உமது நாம மகிமைக்காக உண்மையாயும் பக்தியாயும்,
உம்மைச் சேவிக்கும்படி உமது பரிசுத்த
சபையிலுள்ள எவ்வகையானவர்ளுக்காகவும் உமது சன்னிதானத்தில் நாங்கள் செய்கிற
விண்ணப்பங்களை எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய்க்
கேட்டருளும். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
முதல் வருடம்
ஆகையால்,
நீங்கள் இனி அந்நியரும்
பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே
ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்
மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். எபேசியர் 2.19, 20
இரண்டாம்
வருடம்
நீங்கள்
ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து
கொள்ளுவார்கள். பரி.யோவான் 13.35
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 3ம் ஞாயிறு
3rd Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
முதல் வருடம்
ஞானஸ்நானத்திலே
அவரோடே கூட அடக்கம் பண்ணப்பட்டவர்களாகவும் அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின
தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடே கூட எழுந்தவர்களாகவும்
இருக்கிறீர்கள். கொலோ.2.12
இரண்டாம்
வருடம்
அவர்
வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல்
தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள். 1யோவான் 2.28
சுருக்க ஜெபம்
ஆண்டவரும்
எங்கள் பிதாவுமாகிய கடவுளே, எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீர்
மானிடருக்கு நித்திய ஜீவனை உறுதிப்படுத்தினதுமன்றி, ஞானஸ்நானத்தில் நீர் எங்களை அவரோடு ஒன்றாகியிருக்கிறீர்.
பாவத்தின் மரணத்தினின்று எங்களை நீர் விடுதலையாக்கி, பரிசுத்த ஆவியின் ஒற்றுமையில் உமது அன்பினால் எங்களைப் புதுவாழ்விற்கு
எழுப்பியருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால்
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
முதல் வருடம்
நாம் செய்த
நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல்,
தமது இரக்கத்தின்படியே மறுஜென்ப
முழுக்கினாலும் பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
தீத்து 3.5
இரண்டாம்
வருடம்
உன்னைக்
கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லிருக்கிறாரே, அதினாலே நாம் தைரியங்கொண்டு, கர்த்தர் எனக்குச் சகாயர்; நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே. எபிரேயர் 13.5,6
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 4ம் ஞாயிறு
4th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
முதல் வருடம்
சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும்
உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல்,
தேவனுக்கு அடிமைகளாயிருங்கள். 1பேதுரு 2.16
இரண்டாம்
வருடம்
உங்களில்
எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச்
சீஷனாயிருக்கமாட்டான். பரி.லூக்கா 14.33
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, நீர் பாவத்தின்
கொடுமையை முறித்து உம்மை நாங்கள் பிதாவே என்று அழைக்கத்தக்கதாக உமது
திருக்குமாரனின் ஆவியை எங்கள் இருதயங்களில் அனுப்பினீரே. எல்லா மானிடரும் உமது
பிள்ளைகளின் மகிமை பொருந்திய விடுதலைக்குள் கொண்டுவரப் படத்தக்கதாக எங்களுடைய
சுயாதீனத்தை உமக்குப் படைக்கும்படி கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவர்
இயேசு கிறிஸ்தவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
முதல் வருடம்
ஆகையால்
குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். பரி.யோவான் 8.36
இரண்டாம்
வருடம்
அப்பொழுது அவன்
தன் ஊழியக்காரரை நோக்கி, நீங்கள் வழிச்சந்திகளிலே போய்,
காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு
அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றான். பரி.மத்தேயு 22.8,9
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 5ம் ஞாயிறு
5th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
முதல் வருடம்
ஒருவரிடத்திலொருவர்
அன்பு கூறுகிற கடனேயல்லாமல், மற்றொருன்றிலும் ஒருவனுக்கும் கடன் படாதிருங்கள்.
பிறனிடத்தில் அன்பு கூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். ரோமர் 13.8
இரண்டாம்
வருடம்
இதோ வயல்
நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை
ஏறெடுத்துப்பாருங்கள். பரி.யோவான் 4.35
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, வழி
தப்பினவர்கள் நீதிமார்க்கத்தில் திரும்பி வரும்படி உமது சத்தியத்தின் வழியைக்
காட்டினீரே. கிறிஸ்து மார்க்கத்தின் ஐக்கியத்தில் சேர்க்கப்பட்டிருக்கிற யாவரும்
தங்கள் மார்க்கத்துக்கு ஏற்காதவைகளை விலக்கிப் போடவும் அதற்கு ஏற்ற யாவையும்
பின்பற்றி நடக்கவும் கிருபை செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவாகிய இயேசு
கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்கப்
பின்வரும் வசனம்
முதல் வருடம்
அந்த
நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது.
என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன். நான் அவர்கள்
தேவனாயிருப்பேன், அவர்கள் என்
ஜனமாய் இருப்பார்கள். எபிரெயர் 8.10
இரண்டாம்
வருடம்
அப்பொழுது
இயேசு, வானத்திலும்
பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நீங்கள்
புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள். பரி.மத்தேயு 28.18,19
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 6ம் ஞாயிறு
6th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
துர் இச்சைகளுக்கு
இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
ரோமர் 13.14
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, உம்மையல்லாமல்
நாங்கள் உமக்குப் பிரியமுள்ளவர்களாய் நடக்கத் திராணியற்றவர்களாய் இருக்கிறோம்.
உமது பரிசுத்த ஆவியானவர் எல்லாக் காரியங்களிலும் எங்கள் இருதயங்களை நடத்தி
ஆண்டுகொள்ளும்படி இரக்கமாய்க் கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்கப்
பின்வரும் வசனம்
இப்படியிருக்க
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாய் இருக்கிறான். பழையவைகள்
ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5.17
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 7ம் ஞாயிறு
7th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
உத்தமமானவைகளை
நீங்கள் ஒபபுக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும்
அதிகமதிகமாய்ப் பெருகவும் நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும்
இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். பிலிப்பியர் 1.9-11
சுருக்க ஜெபம்
ஆண்டவரே,
அன்பில்லாமல் நங்கள்
செய்கிறவவைகளெல்லாம் பிரயோஜனமில்லதவைகள் என்று எங்களுக்குக் கற்பித்திருக்கிறீரே.
அன்பில்லதவன் எவனோ அவன் உயிரோடிருந்தாலும் செத்தவன் என்று
எண்ணப்பட்டிருக்கிறபடியால், உமது பரிசுத்த அவியை அனுப்பி, சகல நல் ஈவுகளிலும் உத்தம ஈவும்,
சமாதானம் முதலிய சகல நற்குணங்களையும்
இணைக்கிற கச்சையுமாயிருக்கிற அந்த அன்பை உமது ஒரே குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய
இயேசு கிறிஸ்துவின் மூலமாய் எங்கள் இருதயங்களில் பொழிந்தருளும். ஆமென்
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
நாம்
தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து,
நம்முடைய பாவங்களை நிவர்த்திசெய்கிற
கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. 1
யோவான் 4.10
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 8ம் ஞாயிறு
8th Sunday After Pentecost
ஆரம்ப
வசனம
நல்ல மரம் கெட்ட கனிகளைக்
கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். 7.18,20
சுருக்க ஜெபம்
உமது
பரிசுத்த ஆவியை எங்கள் ஜீவனுக்கும் வெளிச்சத்திற்கும் தந்த சர்வ வல்லமையுள்ள
தேவனே: எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அன்பு, சந்தோஷம், சமாதானம் ஆகிய கனிகளைக் கொண்டுவர அவர் கிருபையின் செல்வத்தில் எங்கள்
உள்ளங்களைத் திறந்தருளும்.
நற்கருணைக்குப்
பிந்திய வசனம்
முற்காலத்தில் நீங்கள்
அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். எபசியர் 5.8,9
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 9ம் ஞாயிறு
9th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
அவர் நீதியை
மார்க்கவசமாய் அணிந்து, இரட்சிப்பென்னும்
சீராவைத் தமது சிரசில் தரித்துக்கொண்டார்.
ஏசாயா 59.17
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, எங்களை
இரட்சித்துக்கொள்ள நாங்கள் திராணியற்றவர்கள் என்று அறிந்திருக்கிறீரே.
சரீரத்திற்கு நேரிடும் எந்த உபத்திரவங்களும் ஆத்துமாவை விரோதித்துச் சேதப்படுத்தும்
எந்த பொல்லாத நினைவுகளும் எங்களை அணுகாதபடி, புறம்பாக எங்கள் சரீரத்தையும் உள்ளாக எங்கள் ஆத்துமாவையும்
காப்பாற்ற வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய்
வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
பகலுக்குரியவர்களாகிய
நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும்,
இரட்சிப்பின் நம்பிக்கையென்னும்
தலைச்சீராவையும் தரித்துக் கொண்டிருக்கக்கடவோம். 1தெசலோனிக்கேயர் 5.8
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 10ம் ஞாயிறு
10th Sunday After Pentecost
TENTH SUNDAY AFTER PENTECOST
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 10ம் ஞாயிறு
ரம்ப வசனம்
கர்த்தருக்குப்
போதிக்கத் தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. 1கொரிந்தியர் 2.16
சுருக்க ஜெபம்
மானிடரின்
பிதாவே, உமது ஒரே பேரான
குமாரன், அடிமையின்
சாயலைத் தரித்துக்கொள்ளவும் சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தவும் அவரைத்
தந்தருளினீரே. அவருடைய தாழ்மையைத் தரித்து, அவரோடு மகிமையில் வரவும், இயேசு கிறிஸ்துவிலிருந்த சிந்தையை எங்களுக்குத் தந்தருளவும்
வேண்டும் என்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிற
இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
மாம்ச சிந்தை
மரணம். ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ரோமர் 8.6
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 11ம் ஞாயிறு
11th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
தேவன் நமக்குப்
பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும் அன்பும் தெழிந்த புத்தியுமுள்ள ஆவியையே
கொடுத்திருக்கிறார். 2தீமோத்.1.7
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
பிதாவே, எங்களுடைய
சகோதர்களில் மிகவும் சிறியவனுக்குச் செய்வது எதுவோ அது அவருக்கே செய்யப்பட்டது
என்று உமது குமாரன் இயேசு கிறிஸ்து எங்களுக்குப் போதித்திருக்கிறாரே. அவர்
யாவருக்கும் ஊழியஞ் செய்யும் நல்லெண்ணத்தைத் தந்தருள வேண்டுமென்று எங்களுக்காகத
தமது ஜீவனைக் கொடுத்து மரித்தும், உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஜீவித்து அரசாளகிய
இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
நீங்கள்
என்னைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே,
நான் அவர்தான்.ஆண்டவரும் போதகருமாகிய
நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
பரி.யோவன் 13.13,14
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 12ம் ஞாயிறு
12th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
கர்த்தராகிய
இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சி
கொடுத்தார்கள். அவர்களெல்லார் மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது. அப்போஸ்தலர் 4.33.
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, நீர்
கிறிஸ்துவின் மானிடரை உம்மோடு ஒப்புரவாக்கினீர் என்பதற்குச் சாட்சியாக உமது
திருச்சபையை அழைத்தீரே. உமது அன்பின் நற்செய்தியைக் கேட்கிற யாவரும் உம்மோடும்
ஒப்புரவாக அந்த நற்செய்தியைப் பிரஸ்தாபப்படுத்த துணை புரிந்தருள வேண்டுமென்று
எங்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்த,
உம்மோடும்,
பரிசுத்த ஆவியோடும்,
இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து
அரசாளுகிற இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
நீங்கள்
உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். மலையின் மேல் இருக்கிற பட்டணம்
மறைந்திருக்கமாட்டாது. பரி.மத்தேயு 5.14
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 13ம் ஞாயிறு
13th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
கிறிஸ்துவினிடத்தில்
விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு
அருளப்பட்டிருக்கிறது. பிலிப்பியர் 1.29
சுருக்க ஜெபம்
ஆண்டவராகிய
கடவுளே, எங்கள் இரட்சகராகிய
உமது திருக்குமாரன் அடிக்கிறவர்களுக்குத் தமது முதுகைக் காட்டி அவமானத்திற்குத்
தமது முகத்தை மறைக்கவில்லையே, வெளிப்படவிருக்கும் மகிமையின் மேலுள்ள உறுதியான
நம்பிக்கையால், இக்காலத்தில்
பாடு அனுபவிக்கக் கிருபை தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்
மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
கிறிஸ்துவின்
மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும் படியாக அவருடைய பாடுகளுக்கு
நீங்கள் சந்தோஷப்படுங்கள். 1பேதுரு 4.13
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 14ம் ஞாயிறு
14th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
தகப்பன் தன்
பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்ககுகிறார். சங்கீதம்
103.3
சுருக்க ஜெபம்
உம்மிடத்தில்
நம்பிக்கை வைக்கிற யாவரையும் காப்பாற்றுகிற ஆண்டவராகிய கடவுளே,
உம்மாலேயன்றி யாதொன்றும் பெலனாயும்
யாதொன்றும் பரிசுத்தமாயும் இராது. பரம பிதாவே, நீர் எங்களை ஆளுகிறவரும் வழி நடத்துகிறவருமாய் இருப்பதினால்,
நாங்கள் கடைசியில் நித்தியமானவைகளை
இழந்து போகாதபடிக்கு, அநித்தியமானவைகளைக்
கடந்து செல்ல, எங்கள்
ஆண்டராகிய இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் கிருபை செய்தருளும். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
கர்த்தருடைய
கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும்
அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. சங்கீதம் 103.17
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 15ம் ஞாயிறு
15th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
நீங்கள்
மனுஷனுடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள். 1பேதுரு 2.13
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, எல்லாவற்றிற்கும்
இராஜாவாயிருக்கிற உமது அன்பின் குமாரன் மூலமாய் எல்லாவற்றையும்
மீட்டுக்கொள்ளுகிறவரே, அதிகாரம்
வகிப்போர் யாவருடைய இருதயத்தையும், மனதையும் ஆண்டு, பாவத்தின் கோரத்தால் பிரிக்கப்பட்டு,
பிளவுபட்டு இருக்கும் தேசங்களின் மக்கள்
அனைவரையும், அவருடைய
நீதியும் சமாதானமுமான ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டுமென்று உம்மோடும்,
பரிசுத்த ஆவியோடும்,
இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து
அரசாளுகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
அப்பொழுது
உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய
ராஜ்யங்களாயின. அவர் சதா காலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார். வெளிப்படுத்தல் 11.15
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 16ம் ஞாயிறு
16th Sunday After Pentecast
ஆரம்ப வசனம்
ராஜா
பிரதியுத்திரமாக, மிகவும்
சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ,
அதை எனக்கே செய்தீர்கள் என்று
சொல்லுவார். பரி.மத்தேயு 25.40
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, அன்பே நியாயப்
பிரமானத்தின் நிறைவேறுதலாய் இருக்கிறது என்று உமது திருக்குமாரன் மூலம் போதித்து
இருக்கிறீரே. நாங்கள் உம்மிடத்தில் முழு இருதயத்தோடு அன்பு கூரவும் எங்களிடத்தில்
அன்பு கூறுவதுபோல பிறரிடத்தில் அன்பு கூரவும் கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்கப்
பின்வரும் வசனம்
பலவீனரைத்
தாங்கவும், வாங்குகிறதைப்
பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை
நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றார்.
அப்போஸ்தலர் 20.35
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 17ம் ஞாயிறு
17th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
ஆவியில்லாத
சரீரம் செத்ததாயிருக்கிறது போல கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
யாக்கோபு 2.26
சுருக்க ஜெபம்
சர்வ
அதிகாரமும் வல்லமையுமுடைய கர்த்தாவே, உமது நாமத்தை நேசிக்கும் அன்பை எங்கள் இருதயத்தில் பொருத்தி,
மெய் தெய்வபக்தியை எங்களுக்குள்ளே வளரப்
பண்ணி, சகல
நன்மைகளினாலும் ஆதிரித்து, உமது மிகுந்த இரக்கத்தினாலே இவைகளில் எங்களை நிலை
நிறுத்தியருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டராவகிய இயேசு கிறிஸ்வின் மூலமாய்
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
நாம்
சகோதரரிடத்தில் அன்பு கூருகிறபடியால் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குபட்டிருக்கிறோமென்று
அறிந்திருக்கிறோம். 1யோவான் 3.14
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 18ம் ஞாயிறு
18th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
வார்த்தையினாலாவவது
கிரியையினாலாவது, நீங்கள் எதைச்
செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்யுங்கள். கொலோசெயர்
3.17
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, நீர் எங்களை
உமக்காக உண்டு பண்ணினீர். உம்மில் இளைப்பாறுதல் கண்டடையும் வரை எங்கள் இருதயங்கள்
இளைப்பாறுதல் அடைவதில்லை. நாங்கள் இம்மையிலே உமது சமாதானத்தை அடையவும்,
மறுமையிலே உம்மை முகமுகமாய்த் தரிசிக்கும்
பாக்கியத்தை அடையவும் எங்களை உமது ஊழியத்திற்கென்று ஒப்படைக்கவும் எங்களுக்குப்
போதித்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய்
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
எல்லாம் வல்ல
கடவுளே, நீர் எங்களை உமக்காக
உண்டு பண்ணினீர். உம்மில் இளைப்பாறுதல் கண்டடையும் வரை எங்கள் இருதயங்கள்
இளைப்பாறுதல் அடைவதில்லை. நாங்கள் இம்மையிலே உமது சமாதானத்தை அடையவும்,
மறுமையிலே உம்மை முகமுகமாய்த்
தரிசிக்கும் பாக்கியத்தை அடையவும் எங்களை உமது ஊழியத்திற்கென்று ஒப்படைக்கவும் எங்களுக்குப்
போதித்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய்
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 19ம் ஞாயிறு
19th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
நாம் தரிசித்து
நடவாமல், விசுவாசித்து
நடக்கிறோம். 2கொரி.5.6
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
நித்திய கடவுளே, பின்னானவைகளை
மறந்து முன்னானவைகளை நாடி நாங்கள் உமது கற்பனைகளின் வழியாய் ஓடி நித்திய
சந்தோஷத்தின் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக எங்களில் உம்மைப் பற்றும்
விசுவாசத்தின் நல் ஈவுகளைப் பெருகச்செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்கப்
பின்வரும் வசனம்
சகோதரரே
நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக
ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறேன்.
ரோமர் 12.1
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 19ம் ஞாயிறு
19th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
நாம் தரிசித்து
நடவாமல், விசுவாசித்து
நடக்கிறோம். 2கொரி. 5.6
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
நித்திய கடவுளே, பின்னனவைகளை
மறந்து முன்னானவைகளை நாடி நாங்கள் உமது கற்பனைகளின் வழியாய் ஓடி நித்திய
சந்தோஷத்தின் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக எங்களில் உம்மைப் பற்றும்
விசுவாசத்தின் நல் ஈவுகளைப் பெருகச்செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
நீங்கள் அவரைத்
தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து சொல்லி முடியாததும் மகிமையால்
நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்தீர்கள். 1பேதுரு 1.8
பெந்தெகொஸ்தே
நாளுக்கப் பின்வரும் 20ம் ஞாயிறு
20th Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
நீங்கள்
உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும்
இருப்பீர்களாக. 1கொரி.15.58
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல
கடவுளே, உம்முடைய
சன்னிதானத்திற்குப் புதிதும் ஜீவனுமுள்ள வழியை உமது குமாரன் எங்களுக்குத்
திறந்திருக்கிறரே. ஆவியோடும் உண்மையோடும் நாங்கள் உம்மைத் தொழுதுகொள்ள தூய
மனதையும் திடமான எண்ணத்தையும் எங்களுக்கு அருளிச் செய்தருள வேண்டுமென்று,
அந்த எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
நீ மரண
பரியந்தம் உண்மையாயிரு. அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன். என்று இயேசு
சொன்னார். வெளி.2.10.
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 21ம் ஞாயிறு
21st Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
நிலையான நகரம்
நமக்கு இங்கே இல்லை. வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். எபிரெயர் 13.14
சுருக்க ஜெபம்
நித்திய பிதாவே,
எல்லாவற்றிற்கும் ஆண்டராய் இருந்து
எல்லாவற்றையும் அரசாளுவதற்கு உமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்து பரலோகத்திலுள்ள
சிம்மாசனத்திற்கு ஏறினாரே. உமது திருச்சபையை ஆவியின் ஒருமையிலும் சமாதானத்தின்
கட்டிலும் காத்து, சிருஷ்டிகள்
யாவும் உமது பாதத்தில் ஆராதிக்க அவற்றைக் கொண்டுவரவேண்டும் என்று உம்மோடும்
பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளோக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற
இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
நாம் தேவ
மகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மை பாராட்டுகிறோம். மேலும் நமக்கு
அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில்
ஊற்றப்பட்டிருக்கிற படியால் அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. ரோமர் 5.2,5
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் 22ம் ஞாயிறு
22nd Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
எந்த
ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்யக் கூடாது. தேவனுக்கும்
உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களாலே கூடாது. பரி.லூக்கா 16.13
சுருக்க ஜெபம்
ஆண்டவரே,
நாங்கள் நற்கிரியைகளாகிய கனிகளைச்
சம்பூரணமாய்க் கொடுத்து உம்மிடத்தில் பலனைச் சம்பூரணமாய்ப் பெறும்படி,
நமது ஜனமாகிய எங்கள் மனதை எழுப்பியருள
வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.
ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
இடுக்கமான
வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி
நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர். பரி.மத்தேயு 7.13,14
பெந்தெகொஸ்தே
நாளுக்குப் பின்வரும் கடைசி ஞாயிறு
Last Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
அவருடைய
வாக்குத்தத்ததின் படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும்
உண்டாகும் என்று காத்திருக்கிறோம். 2பேதுரு 3.13
சுருக்க ஜெபம்
இரக்கமுள்ள
ஆண்டவரே, உம்மிடத்தில்
அன்பு கூருகிறவர்களுக்கு மனோவாக்குக்கு எட்டாத நன்மைகளை ஆயத்தம் பண்ணி இருக்கிறவரே.
நாங்கள் எல்லாவற்றிற்கும் அதிகமாய் உம்மிடத்தில் அன்பு கூரவும் நாங்கள்
விரும்புகிற எல்லாவற்றிற்கும் மேற்பட்ட உம்முடைய வாக்குத் தத்தங்களைப்
பெற்றுக்கொள்ளவும், உம்மைப்
பற்றும் அன்பாகிய வரப்பிரசாதத்தை எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் எங்கள்
இருதயங்களில் பொழிந்தருளவும் வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
நான்
உலகத்தானல்லாதது போல, அவர்களும்
உலகத்தாரல்ல என்று இயேசு சொன்னார். பரி.யோவான் 17.16.
பாக்கியவதியாக
பரிசத்த கன்னிமரியாள் மங்களவாக்கத் திருநாள் (மார்ச் 25)
The Annuciation of our Lord to the blessed Virgin Mary (25
March)
ஆரம்ப வசனம்
இதோ,
ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு
குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்குத்
தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். பரி.மத்தேயு 1.23,
ஏசாயா 7.14
சுருக்க ஜெபம்
ஆண்டவரே,
உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின்
மனுஷ அவதாரத்தைத் தேவ தூதனுடைய வாக்கினால் அறிந்துகொண்ட நாங்கள் அவருடைய
சிலுவையினாலும் பாடுகளினாலும் அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலுக்குப்
பங்குள்ளவர்களாகும்படி, எங்கள்
இருதங்களில் உம்முடைய கிருபையைப் பொழிந்தருள வேண்டுமென்று,
எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
அந்த வார்த்தை
மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார். பரி.யோவான் 1.14
சுவிசேஷகனாகிய
பரிசுத்த மாற்குவின் திருநாள் (ஏப்ரல் 25)
St. Mark the Evengelist (25 April)
ஆரம்ப வசனம்
நீங்கள்
உலகமெங்கும் போய், சர்வ
சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். பரி.மாற்கு 16.15
அல்லது
பயப்படாதிருங்கள்,
சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய
இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார். அவர் உங்களுக்குச் சொன்னபடியே
அங்கே அவரைக் காண்பீர்கள். பரி.மாற்கு 16.6,7
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள கடவுளே, உமது
ஏவுதலினால் உமது சுவிசேஷகனாகிய பரிசுத்த மாற்கு அருளின சாட்சியின் மூலம் உமது
பரிசுத்த திருச்சபையை நீர் பிரகாசிப்பித்துள்ளீர்.அவருடைய நற்செய்தியின்
சத்தியத்தில் நாங்கள் நன்கு வேர் உன்றி, அதனுடைய போதகத்திற்கு வார்த்தையிலும் செயலிலும்
உண்மையுள்ளவர்களாய் இருக்க, கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
இதோ,
உலகத்தின் முடிவுபரியந்தம் சகல
நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று இயேசு சொன்னார். பரி.மத்தேயு 28.30
அப்போஸ்தலர்களாகிய
பரிசுத்த பிலிப்பு, பரிசுத்த யாக்கோபு
ஆகியோரின் திருநாள் (மே 1)
St. Philip and St. James, Apostles (1 May)
ஆரம்ப வசனம்
நீங்கள் என்
நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக அதைச் செய்வேன் என்று
இயேசு சொன்னார். பரி.யோவான் 14.13
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள கடவுளே, உம்மை மெய்யாய்
அறிந்துகொள்ளுவதே நித்திய ஜீவன். உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை,
வழியும் சத்தியமும் ஜீவனுமாய்
அறிவதினால் உமது அப்போஸ்தலர்களாகிய பரிசுத்த பிலிப்பு,
பரிசுத்த யாக்கோபு என்பவர்களுடைய
அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து உமது மகிமைக்கு நடத்துகிற வழியில் உறதியாய் நடக்க
எங்களுக்குப் போதிக்க வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
பிலிப்பு அவரை
நோக்கி ஆண்டவரே, பிதாவை
எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு என்னைக்
கண்டவன் பிதாவைக் கண்டான் என்றார். பரி.யோவான் 14.8,9
அப்போஸ்தலனாகிய
பரிசுத்த மத்தியாவின் திருநாள் (மே 14)
St.Mathias the Apostle (14 May)
ஆரம்ப வசனம்
நீங்கள்
என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நான் உங்களைத் தெரிந்து கொண்டேன். என்று இயேசு
சொன்னார். நீங்கள் போய்க் கனி கொடுங்கள். உங்கள் கனி நிலைத்திருக்கும். பரி.யோவான்
15.16
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள கடவுளே, பன்னிரண்டு
அப்போஸ்தலர்களில் ஒருவன யிருக்கும்படி உண்மையுள்ள உம்முடைய பணிவிடைக்காரனாகிய
பரிசுத்த மத்தியாவைத் துரோகியாகிய யூதாசுக்குப் பதிலாகத் தெரிந்து கொண்டீரே. கள்ள
அப்போஸ்தலர்கள் அணுகாதபடி எப்பொழுதும் உமது திருச்சபையைக் காப்பாற்றி,
விசுவாசமுள்ள மேய்ப்பர்களும்
போதகர்களும் செய்யும் பணிவிடையினால், எங்களை உமது சத்தியத்தில் உறுதியாய்ப் பாதுகாத்தருள
வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
நான் உங்களில்
அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே
என்னுடைய கற்பனையாயிருக்கிறது. பரி.யோவான் 15.12
அப்போஸ்தலனாகிய
பரிசுத்த பர்னபாவின் திருநாள் (ஜூன் 11)
St. Barnabas the Apostle (11 June)
ஆரம்ப வசனம்
பர்னபா
நல்லவனும், பரிசுத்த
ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாய் இருந்தான். அப்போஸ்தலர் 11.24
சுருக்க ஜெபம்
எங்கள் ஆண்டவராகிய
சர்வ வல்லமையுள்ள கடவுளே, பெற்றுக் கொள்ளுவதைவிட கொடுப்பதே மிகவும் நலமானது என்று
உம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்து எங்களுக்குப் போதித்திருக்கிறாரே. உமது
அப்போஸ்தலனாகிய பரிசுத்த பர்னமபாவின் முன்மாதிரியைப் பின்பற்றி,
பிறரை நியாயந்தீர்ப்பதில் தாரளமாயிருக்கவும்,
எங்களுடைய சேவையில் சுயநலமற்றவர்களாய்
இருக்கவும், எங்களுக்கு
உதவிபுரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
இனி நான்
உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை. நான் உங்களை சிநேகிதர் என்றேன். ஏனெனில்
என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்
என்று இயேசு சொன்னார். பரி.யோவான் 15.15
பரிசுத்த
யோவான் ஸ்நானகனின் பிறப்பு (ஜூன் 24)
The birth of St. John the Baptist (24 June)
ஆரம்ப வசனம்
தேவனால்
அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான். அவன் பெயர் யோவான். அவன் அந்த ஒளியைக்
குறித்துச் சாட்சி கொடுக்கச் சாட்சியாய் வந்தான். பரி.யோவான் 1.6,7
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள கடவுளே, உமது குமாரனின்
வருகைக்காக வழியை ஆயத்தம் பண்ணுவதின் மூலம் உமது நோக்கத்தை நிறைவேற்ற உமது
பணிவிடைக்காரனாகிய பரிசுத்த யோவான் ஸ்நானகன் ஆச்சரியமான விதமாய்ப் பிறந்தாரே,
அவர் போதித்தபடி நாங்கள் மனந்திரம்பவும்
அவருடைய முன்மாதிரியின்படி எப்பொழுதும் சத்தியத்தைச் சொல்லி,
துன்மார்க்கத்தைத் தைரியமாய்க்
கண்டித்து, சத்தியத்தினிமித்தம்
வரும் துன்பத்தைப் பொறுமையோடு சகிக்கவும் எங்களை வழி நடத்தியருள வேண்டுமென்று
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
தேவனுடைய
இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.
பரி.லூக்கா 1.79.
அப்போஸ்தலனாகிய
பரிசுத்த பேதுருவின் திருநாள் (ஜூன் 29)
St. Peter the Apostle (29 June)
ஆரம்ப வசனம்
இயேசு பேதுருவை
நோக்கி, நானோ உன்
விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன். நீ குணப்பட்ட பின்பு
உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். பரி.லூக்கா 22.32
அல்லது
அப்பொழுது அவர்,
நீங்கள் என்னை யார் என்று
சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக நீர் தேவனுடைய கிறிஸ்து
என்றான். பரி.லூக்கா 9.20
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள கடவுளே, இயேசவே
கிறிஸ்து என்றும் ஜீவனுள்ள கடவுளாகிய உமது குமாரன் என்றும் அறிக்கை செய்யும்படி
உமது அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுருவை ஏவினீரே, உம்முடைய திருச்சபை, ஒருமையிலும் சமாதானத்திலும் ஒரே சத்தியத்தைப்
பிரஸ்தாபிக்கவும், உம்முடைய
குமாரனும் எங்கள் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்வாகிய ஒரே ஆண்டவரைப் பின் தொடரவும்
அந்தத் திருச்சபையை அந்த விசுவாசத்தின் கன்மலையின் மேல் கட்டியருள வேண்டுமென்று
உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் இப்பொழுதும் எப்பொழுதும் ஒரே கடவுளாக ஜீவித்து
அரசாளுகிற அந்த இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
இயேசு சீமோன்
பேதுருவை நோக்கி, யோனாவின்
குமாரனாகிய சீமோனே, நீ என்னை
நேசிக்கிறாயா என்றார். பேதுரு, ஆண்டவரே நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். நான் உம்மை
நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். பரி.யோவான் 21.15,
17
அப்போஸ்தலனாகிய
பரிசுத்த தோமாவின் திருநாள் (ஜூலை 3)
St. Thomas the Apostle (3 July)
ஆரம்ப வசனம்
அதற்கு இயேசு,
தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய். காணாதிருந்தும்
விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். பரி.யோவான் 20.29
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள நித்திய கடவுளே, எங்களுடைய விசுவாசம் உறுதிப்படும்படியாக,
உமது அப்போஸ்தலனாகிய பரிசுத்த தோமா,
வார்த்தையும் கண்ணால் காண்பதினால்
காட்சியும் தன்னை உறுதிப்படுத்தும் வரை உம்முடைய குமாரனின் உயிர்த்தெழுதலைக்
குறித்து சந்தேகப்பட அனுமதித்தீரே, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்ணால் காணாத நாங்கள் அவரை
விசுவாசிக்கவும், கிறிஸ்துவின்
பூரண ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளவும் எங்களக்குக் கிருபை செய்தருள வேண்டுமென்று
உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் இப்பொழுதும் எப்பொழுதும் ஒரே கடவுளாக ஜீவித்து
அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்கப்
பின்வரும் வசனம்
தோமா
அவருக்குப் பிரதியுத்தரமாக, 'என் ஆண்டவரே, என் தேவனே’ என்றான். பரி.யோவான் 20.28
பரிசுத்த
மகதலேனா மரியாளின் திருநாள் (ஜூலை 22)
St. Mary Magdalen (22 July)
ஆரம்ப வசனம்
வாரத்தின்
முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே,
மகதலேனா மரியான் கல்லறையினிடத்திற்கு
வந்தாள். பரி.யோவான் 20.1
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள கடவுளே, உமது குமாரன்,
மகதலேனா மரியாளுக்கு மனதிலும்
சரீரத்திலும் சுகமளித்து அவருடைய உயிர்த்தெழுதலுக்கு அவர் சாட்சியாயிருக்கும்படி
அழைத்தாரே. அவருடைய உயிர்த்தெழுந்த ஜீவனின் வல்லமையால் உம்மைச் சேவிக்கும்படி
உம்முடைய கிருபையினால் எங்களை மன்னித்து
குணமாக்கியருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் இப்பொழுதும் எப்பொழுதும்
ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
இயேசு அவளை
நோக்கி, மரியாளே
என்றார். அவள் திரும்பிப் பார்த்து, ரபூவி என்றாள். அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
பரி.யோவான் 20.16
அப்போஸ்தலனாகிய
பரிசுத்த யாக்கோபின் திருநாள் (ஜூலை 25)
St. James the Apostle (25 July)
ஆரம்ப வசனம்
இயேசு கலிலேயாக்
கடலோரமய் நடந்துபோகையில், யாக்கோபையும், அவன் சகோதரன் யோவானையும் கண்டு,
அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள்
அவருக்குப் பின் சென்றார்கள். பரி.மத்தேயு 4.18, 21
சுருக்க ஜெபம்
இரக்கமுள்ள
கடவுளே, உம்முடைய
அப்போஸ்தலனாகிய பரிசுத்த யாக்கோபு தன்னுடைய தகப்பனையும்,
தனக்குண்டான யாவற்றையும் விட்டுவிட்டு,
தனது மரண பரியந்தம் உமது குமாரன் இயேசு
கிறிஸ்துவைப் பின்பற்றினதுபோல, நாங்களும் எங்கள் எல்லா சுயநலமான ஆசைகளையும் வெறுத்துவிட்டு,
உம்முடைய அழைப்புக்கு எப்பொழுதும் இணங்க
ஆயத்தமாயிருக்க கிருபை செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை
முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
இயேசு அவர்களை
நோக்கி என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், ஆனாலும் என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும்
உட்கார்ந்திருக்கும்படி, அதை அருளுவது என் காரியமல்ல என்றார். பரி.மத்தேயு 20.23
நமது
ஆண்டவருடைய மறுரூபத் திருநாள் (ஆகஸ்டு 6)
The Transfiguration of our Lord (6 August)
ஆரம்ப வசனம்
இருளிலிருந்து
வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது
மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக,
எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். 11கொரிந்தியர் 4.6
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள பிதாவே, உமது
திருக்குமாரன் சிலுவையில் மரணத்தை உத்தரிக்குமுன் மகிமையில் வெளிப்படுத்தப்பட
சித்தங் கொண்டீரே, நாங்கள் அவரோடு
கூட பாடனுபவிக்க பலப்படுத்தப் பட்டவர்களாய் மகிமையின் மேல் மகிமையடைந்து,
அவருடைய சாயலில் மறரூபமாகத் தக்கதாக,
அவருடைய மகிமையை உணர்ந்து கொள்ள
எங்களுக்கு விசுவாசத்தை அருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே
கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
ஆண்டவரே,
நாம் இங்கே இருக்கிறது நல்லது.
பரி.மத்தேயு 17.4
அப்போஸ்தலனாகிய
பரிசுத்த பர்த்தொலொமேயுவின் திருநாள் (ஆகஸ்டு 24)
St. Bartholomew the Apostle (24 August)
ஆரம்ப வசனம்
நாளுக்கு நாள்
அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையைம்
விவரித்துச் சொல்லுங்கள். சங்கீதம் 96.2,3
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள கடவுளே, உமது வசனத்தை
உண்மையாய் விசுவாசிக்வும் பிரசங்கிக்கவும் உம்முடைய அப்போஸ்தலனாகிய பரிசுத்த
பர்த்தொலொமேயுவுக்குக் கிருபை அளித்தீரே. அவர் நேசித்த அந்த உமது வசனத்தை உமது
திருச்சபை நேசிக்கவும், அதை உண்மையென்ற
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
ஆகையால்,
என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை
ஏற்படுத்தினது போல, நானும்
உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜன பானம்
பண்ணுவீர்கள் என்று இயேசு சொன்னார். பரி.லூக்கா 22.29, 30
பாக்கியவதியாக
கன்னிமரியாளின் திருநாள் (செப்டம்பர் 8)
The Blessed Virgin Mary (8 September)
ஆரம்ப வசனம்
விசுவாசித்தவளே
பாக்கியவதி, கர்த்தராலே
அவளுக்குச் சொல்லப் பட்டவைகள் நிறைவேறும் என்றாள். பரி.லூக்கா 1.45
அல்லது
அதற்கு மரியாள்,
இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றான்.
பரி.லூக்கா 1.38
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள கடவுளே, பாக்கியவதியாகிய
கன்னி மரியாள் அவர்களை, உமது ஒரே
குமாரனின் தாயாராகத் தெரிந்து கொண்டவரே, உமது ஒரே குமாரனின் இரத்ததினால் மீட்கப்பட்ட நாங்கள்
அப்பாக்கியவதியோடு உமது நித்திய இராஜ்ஜியத்தின் மகிமையில் பங்கு பெற கிருபை
செய்தருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும்
எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
தேவனுடைய
வார்த்தையைக் கேட்டு, அதைக்
காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார். பரி.லூக்கா 11.28
அல்லது
மரியாளோ அந்தச்
சங்கதிகளை யெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனை பண்ணினாள். பரி.லூக்கா .19
அப்போஸ்தலனாகிய
பரிசுத்த மத்தேயுவின் திருநாள் (செப்டம்பர் 21)
St. Matthew the Apostle (21 September)
ஆரம்ப வசனம்
ஆயத்துறையில்
உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு,
எனக்குப்பின் சென்றுவா என்றார்.
பரி.மத்தேயு 9.9
சுருக்க ஜெபம்
சர்வ
வல்மையுள்ள கடவுளே, பரிசுத்த
மத்தேயு சுயநலமான ஆதாயத்தைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு ஒரு அப்போஸ்தலனாகவும்
சுவிசேஷகனாகவும் ஆகும்படி உமது குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் அழைத்தீரே, நாங்கள் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தவின் அடிச்சுவடுகளைப் பின்தொடரும்படி,
எங்களை எல்லா பற்றுகளிலும் பண ஆசையிலும்
இருந்து பிரித்தருள வேண்டுமென்று, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும்
எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
பின்பு அவர்
வீட்டிலே போஜன பந்தியிருக்கையில், அநேக ஆயக்காரருரும் பாவிகளும் வந்து,
இயேசுவோடு பந்தியிருந்தார்கள். இயேசு
பினியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
நீதிமான்களையல்ல, பாவிகளையே
மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். பரி.மத்தேயு 9.10,12,13
பரிசுத்த
மிகாவேல் முதலான சகல தேவதூதர்களின் திருநாள்
St. Michael and all Angels (29 September)
ஆரம்ப வசனம்
கர்த்தருடைய
வார்த்தையைக் கேட்டு, அவருடைய
வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே,
அவரை ஸ்தோத்திரியுங்கள். சங்கீதம் 103.20
சுருக்க ஜெபம்
நித்திய
ஆண்டவராகிய கடவுளே, தேவதூதரும்
மனிதரும் செய்யும் பணிவிடைகளை அதிசயமான பிரகாரமாய் ஏற்படுத்தினவரே. உமது பரிசுத்த
தூதர்கள் பரலோகத்தில் எப்பொழுதும் உம்மைச் சேவிப்பது போல,
உமது கட்டளையின்படி அவர்கள்
பூலோகத்திலும் எங்களை ஆதரித்துக் காப்பாற்றும்படி கிருபை செய்தருள வேண்டுமென்று
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
உம்மை என் முழு
இருதயத்தோடு துதிப்பேன். தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
சங்கீதம் 138.1
சுவிசேஷகனாகிய
பரிசுத்த லூக்காவின் திருநாள் (அக்டோபர் 18)
St. Luke the Evengelist (18 October)
ஆரம்ப வசனம்
இயேசுவானவர்
எடுத்துக் கொள்ளப்பட்ட நாள் வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின
எல்லாவற்றையும் குறித்து முதலாம் பிரபந்தத்தை லூக்கா உண்டு பண்ணினார். அப்போஸ்தலர்
1.2
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள கடவுளே, உமது குமாரனின்
அன்பையும் குணமாக்கும் வல்லமையையும் பிரசித்தப்படுத்த வைத்தியனாகிய
பரிசுத்தமாக்கும் வல்லமையையும் பிரசித்தப்படுத்த வைத்தியனாகிய பரிசுத்த லூக்காவை
ஏவினீரே. ஆவியின் கிருபையினாலும், நற்செய்தியாகிய மருந்தின் மூலமாகவும் குணமாக்கும் அந்த
அன்பையும் வல்லமையையும் உமது திருச்சபைக்காகத் தந்தருள வேண்டுமென்று எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்கப்
பின்வரும் வசனம்
சமாதானத்தைக்
கூறி, நற்காரியங்களைச்
சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப்
பிரசித்தப்படுத்தி, உன் தேவன்
ராஜரீகம் பண்ணுகிறாரென்று, சீயோனக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்
மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. ஏசாயா 52.7
அப்போஸ்தலர்களாகிய
பரிசுத்த சீமோன், பரிசுத்த யூதா
ஆகியோரின் திருநாள் (அக்டோபர் 28)
St. Simon and St.Jude, Apostles (28 October)
ஆரம்ப வசனம்
பிரியமானவர்களே,
உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்
மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெயம் பண்ணுங்கள். யூதா 20
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள கடவுளே, இயேசு
கிறிஸ்துவையே பிரதான மூலைக்கல்லாக வைத்து, அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திவாரத்தின்
மேல் உமது திருச்சபையைக் கட்டி இருக்கிறீரே. நாங்கள் உமக்குப் பிரியமான பரிசுத்த
ஆலயமாகும்படி அவர்களுடைய உபதேசத்தினால், ஆவியின் ஒருமையில் எங்களை ஒருவரோடு ஒருவராக இணைக்க
வேண்டுமென்று எங்கள் ஆண்டரவாகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
இயேசு
அவனுக்குப் பிரதியுத்தரமாக, ஒருவன் என்னில் அன்பாயிருந்தால்,
அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்.
அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்
பண்ணுவோம் என்று சொன்னார். பரி.யோவான் 14.23
சகல
பரிசுத்தவான்களின் திருநாள் (நவம்பர் 1)
all Saints' Day (1 November)
ஆரம்ப வசனம்
நமது தேவனுடைய
ஊழியக்காரரே, அவருக்குப்
பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள். வெளிப்படுத்தின
விசேஷம் 19.5
சுருக்க ஜெபம்
சர்வ வல்லமையுள்ள
கடவுளே, நீர்
தெரிந்துகொண்டவர்களை உம்முடைய குமாரனின் ஞான சரீரத்தில் ஒரே அன்னியோன்னியமாக
இணைத்திருக்கிறீரே. உண்மையாய் உம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்காகத் தேவரீர்
ஆயத்தம் பண்ணியிருக்கிற சொல்லி முடியாத சந்தோஷங்களை அடையும்படிக்கு நாங்கள்
சன்மார்க்கமும், தேவபக்தி
உள்ளவர்களுமாய் நடந்து, ஆசீர்வதிக்கப்பட்ட
உம்முடைய பரிசுத்தவான்களைப் பின்தொடரும்படி கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
அப்பொழுது
திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம் போலவும், பலத்த அடிமுழக்கம் போலவும், ஒரு சத்தமுண்டாகி, அல்லேலூயா’ சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்
பண்ணுகிறார். ஆட்டுக் குட்டியானவரின் கலியான விருந்துக்கு அழைக்கப்படடவர்கள்
பாக்கியவான்கள், என்றெழுது
என்றான். வெளி. விசேஷம் 19.6,9
சகல
ஆத்துமாக்களின் ஞாபகார்த்தம்
Commemoration Of The Faithful Departed
ஆரம்ப வசனம்
இயேசுவானவர்
மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோம். அப்படியே இயேசுவுக்குள்
நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டு வருவார். 1 தெசலோனிக்கேயர் 4.14
சுருக்க ஜெபம்
இரக்கமுள்ள
கடவுளே, உமது குமாரன்
இயேசு கிறிஸ்து, விசுவாசிகள்
யாவருக்கும் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறாரே. நாங்களும் மரித்த எங்கள்
சகோதரர்களோடு கடைசியில் உமது நித்திய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்ககத்தக்கதாக,
எங்களைப் பாவத்தின் மரணத்தினின்று
நீதியின் ஜீவனைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக எழுப்பியருளவேண்டுமென்று எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
என்
மாம்சத்தைப் புசித்து, என்
இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசிநாளில்
எழுப்புவேன். பரி.யோவான் 6.54.
அல்லது
இயேசு அவளை
நோக்கி, நானே
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும
பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும்
இருப்பான் என்றார். பரி.யோவான் 11.25, 26
அப்போஸதலனாகிய
பரிசுத்த அந்திரேயாவின் திருநாள் (நவம்பர் 30)
St. Andrew the Apostle (30 November)
ஆரம்ப வசனம்
இயேசு,
என் பின்னே வாருங்கள்,
உங்களை மனுஷரைப்
பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். பரி.மத்«யு 4.19
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள கடவுளே, உமது
அப்போஸ்தலனாகிய பரிசுத்த அந்திரேயா உமது குமாரனின் அழைப்புக்கு உடனடியாக
கீழ்ப்படியவும் தனது சகோதரனைத் தன்னோடு கொண்டுவரவும் அவருக்குக் கிருபை அருளினீரே.
உமது பரிசுத்த வசனத்தால் அழைக்கப்படும் நாங்கள் தாமதமின்றி உம்மைப் பின் தொடரவும்
உமது இராஜ்ஜியத்தின் நற்செய்தியை எடுத்துக்கூறவும், உமது கிருபையைத் தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டராகிய
இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
அந்திரேயா தன்
சகோதரனாகிய சீமோனைக் கண்டு, மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான். மேசியா என்பதற்குக்
கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை
இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டு வந்தான். பரி.யோவன் 1.41,
42
முதல் இரத்தச்
சாட்சியாகிய பரிசுத்த ஸ்தேவானுடைய திருநாள் (டிசம்பர் 26)
St. Stephen the first Martyr (26 Deecember)
ஆரம்ப வசனம்
ஸ்தேவான்
விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய
அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். அப்போஸ்தலர் 6.8
சுருக்க ஜெபம்
பரம பிதாவே,
சிலுவையில் அறையுண்ட இயேசுவை நாங்களும்
நோக்கவும், எங்களைத்
துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்கவும் தக்கதாக, சத்தியத்திற்காக நாங்கள் படும் துன்பங்களில் உமது முதல்
இரத்தச் சாட்சியான பரிசுத்த ஸ்தேவானின் முன்மாதிரியைப் பின்பற்ற எங்களுக்குக்
கிருபை தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
மனுஷகுமாரன்
தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதைக் காண்கிறேன். கர்த்தராகிய இயேசுவே,
என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்றான்.
அப்போஸ்தலர் 7.56, 59
சுவிசேஷகனாகிய
பரிசுத்த யோவானின் திருநாள் (டிசம்பர் 27)
St. John the Evengelist (27 December)
ஆரம்ப வசனம்
அந்தச் சீஷனே
இவைகளைக் குறித்துச் சாட்சி கொடுத்து இவைகளை எழுதினான். அவனுடைய சாட்சி மெய்யென்று
அறிந்திருக்கிறோம். பரி.யேவான் 21.24
சுருக்க ஜெபம்
இரக்கமுள்ள
பிதாவே, உமது
திருக்குமாரன் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறாரே. நாங்கள் எங்கள் மத்தியில் வந்துள்ள அந்த ஒளியில் நடக்கவும் கடைசியில்
அவரை நித்திய ஜீவனுக்காக ஒளியாக அறிந்துகொள்ளவும் தக்கதாக,
உமது அப்போஸ்தலனும் சுவிசேஷகனுமாகிய
பரிசுத்த யோவான் உபதேசத்ததால் உமது திருச்சபையை வழிநடத்தியருள வேண்டுமென்று
உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து
அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
அந்த வார்த்தை
மாம்சமாகி, நமக்குள்ளே
வாசம்பண்ணினார். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின் மேல் கிருபை
பெற்றோம். பரி.யோவான் 1.14, 16
குற்றமில்லாப்
பாலகருடைய திருநாள் (டிசம்பர் 28)
The Holy Innoucents (28 December)
ஆரம்ப வசனம்
நான் அவர்கள்
துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச்
சந்தோஷப்படுத்துவேன். எரேமியா 31.13
சுருக்க ஜெபம்
பரம பிதாவே,
தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருந்த
போதிலும் ஏரோதுவின் கைகளில் பாலகர் துன்பம் அனுபவித்தனரே. நாங்கள் கொடூரமாய்
நடக்காமலும் ஏனோதானோவென்று இருக்காமலும் பலமுள்ளவர்களன் கொடுமையில் துன்புறும்
பலவீனரைத் தாங்கவும் எங்களுக்காக துன்புற்ற போதிலும் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும்
ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிற இயேச கிறிஸ்துவின் நாமத்தினால்
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
ஆட்டுக்குட்டியானவர்
எங்கே போனாலும் அவரைப் பின்பற்றகிறவர்கள் இவர்களே. இவர்கள் மனுஷரிலிருந்து
தேவனுக்கும் ஆட்டுக்குட்டியான வருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 14.4
அறுப்பின்
பண்டிகை
ஆரம்ப வசனம்
பூமி தன்
பலனைத் தரும். தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார். சங்கீதம் 67.6.
COLLECT சுருக்க ஜெபம
சர்வ
வல்லமையுள்ள நித்திய கடவுளே, உமது பிதாவின் தன்மை பொருந்திய நன்மையினாலும் கருத்தினாலும்
பூமியின் பலன்களை அதனதன் காலத்தில் கிருபையாக அளித்ததற்காக உமக்கு முழுமனதோடு
நன்றி செலுத்துகிறோம். அவற்றை உமது நாம மகிமைக்காகவும் எங்கள் நலத்திற்காகவும்
பிறரின் தேவைகளைத் துடைப்பதற்காகவும் சரியாக உபயோகிக்கக் கிருபை தந்தருள
வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்
கொள்ளுகிறோம். ஆமென்.
POST COMMUNION SENTENCE
நற்கருணைக்குப் பின்வரும்‹ வசனம்‹
உமது
கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது. மனுஷனுடைய இருதயத்தை
மகிழ்ச்சியாக்கும் திராட்சரத்தையும், அவனுக்கு முகக் களையை உண்டுபண்ணும் எண்ணெயையும்,
மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும்
ஆகாரத்தையும் விளைவிக்கிறார். சங்கீதம் 104.13,15
SOCIAL RESPONSIBELITY DAY
சமூகக்
கடப்பாடு திருநாள்
சர்வ
வல்லமையுள்ள பிதாவே, உமது குமாரன் இயேசு
கிறிஸ்துவின் மூலம் எங்களில் எளிய சகோதரர்களுக்கு எதைச் செய்கிறோமோ அதையே உமக்கும்
செய்வதாக போதித்தீரே, அவர்
எல்லோருக்கும் பணி விடை செய்ததுபோல நாங்களும் பிறருக்குப் பணி விடை செய்யத் தக்கதான ஆர்வத்தைக் தந்தருளும்.
இன்றும் என்றென்றும் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் உயிர்த்தெழுந்து ஜீவிக்கிற
இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டுகிறோம்.
பெரிய வெள்ளிக்கிழமை
Good Friday
INDRODUCTARY
SENTENCE ஆரம்ப வசனம்
God showed his
love for us in that while we were still sinners Christ died for us. Romans 5.8
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே
தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5.8
COLLECTS COLLECTS
சுருக்க ஜெபங்கள்
Almighty Father,
look with mercy on this your family for which our Lord Jesus Christ was content
to be betrayed and given up into the hands of wicked men and to suffer death
upon the cross; who is alive and glorified with you and the Holy Spirit, one
God, now and forever.
சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், தேவரீருடைய வீட்டாராகிய எங்களுக்காகக்
காட்டிக்கொடுக்கப்படவும், அக்கிரமக்காரருடைய
கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும் சிலுவையில் மரணமடையவும மனதாரச
சம்மதித்ததினிமித்தம், எங்களைக்
கிருபையோடே கண்ணோக்கிப் பார்க்க வேண்டுமென்று, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே தேவனாக என்றென்றைக்கும்
ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்
Almighty and
everlasting God, by whose Spirit the whole body of the Church is governed and
sanctified: hear our prayer which we offer for all your faithful people; that
each in his vocation and ministry may serve you in holiness and truth to the
glory of your Name; through our Lord and Saviour Jesus Christ.
சர்வ வல்லமையுள்ள அநாதி தேவனே, திருச்சபையாகிய சரீரம் முழுவதையும்
உம்முடைய ஆவியினாலே ஆண்டு பரிசுத்தமாக்கிக் கொண்டு வருகிறீர். அதன் அவயவங்களாகிய ஒவ்வொருவரும்
தான் அழைக்கப்பட்டிருக்கிற நிலைமையிலும் பணிவிடையிலும் உண்மையாயும் பக்தியாயும்
உம்மைச் சேவிக்கும்படி உம்முடைய பரிசுத்த சபையிலுள்ள எவ்வகையானவர்களுக்காகவும்
நாங்கள் உமது சந்ததியில் செய்கிற விண்ணப்பங்களையும் ஜெபங்களையும், எங்கள் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு
கிறிதுவினிமித்தம் ஏற்றுக்கொண்டருளும். ஆமென்.
POST COMMUNION
SERVICE பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
As we eat this
bread and drink this cup we proclaim the death of the Lord until he comes. 1
Corinthians 11.26