Thursday, December 22, 2022

Good Friday

பெரிய வெள்ளிக்கிழமை

Good Friday

ஆரம்ப வசனம்

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5.8

 

சுருக்க ஜெபங்கள்

சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், தேவரீருடைய வீட்டாராகிய எங்களுக்காகக் காட்டிக்கொடுக்கப்படவும், அக்கிரமக்காரருடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும் சிலுவையில் மரணமடையவும மனதாரச சம்மதித்ததினிமித்தம், எங்களைக் கிருபையோடே கண்ணோக்கிப் பார்க்க வேண்டுமென்று, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே தேவனாக என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்

 

சர்வ வல்லமையுள்ள அநாதி தேவனே, திருச்சபையாகிய சரீரம் முழுவதையும் உம்முடைய ஆவியினாலே ஆண்டு பரிசுத்தமாக்கிக் கொண்டு வருகிறீர். அதன் அவயவங்களாகிய ஒவ்வொருவரும் தான் அழைக்கப்பட்டிருக்கிற நிலைமையிலும் பணிவிடையிலும் உண்மையாயும் பக்தியாயும் உம்மைச் சேவிக்கும்படி உம்முடைய பரிசுத்த சபையிலுள்ள எவ்வகையானவர்களுக்காகவும் நாங்கள் உமது சந்ததியில் செய்கிற விண்ணப்பங்களையும் ஜெபங்களையும், எங்கள் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினிமித்தம் ஏற்றுக்கொண்டருளும். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 1கொரிந்தியர் 11:26

SOCIAL RESPONSIBELITY DAY

 SOCIAL RESPONSIBELITY DAY

சமூகக் கடப்பாடு திருநாள்

சர்வ வல்லமையுள்ள பிதாவே, உமது குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் எங்களில் எளிய சகோதரர்களுக்கு எதைச் செய்கிறோமோ அதையே உமக்கும் செய்வதாக போதித்தீரே, அவர் எல்லோருக்கும் பணி விடை செய்ததுபோல நாங்களும் பிறருக்குப் பணி விடை செய்யத் தக்கதான ஆர்வத்தைக் தந்தருளும். இன்றும் என்றென்றும் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் உயிர்த்தெழுந்து ஜீவிக்கிற இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டுகிறோம்.

Thanksgiving Service

 அறுப்பின் பண்டிகை Thanksgiving Service

 

ஆரம்ப வசனம்

பூமி தன் பலனைத் தரும். தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார். சங்கீதம் 67.6.

 

சுருக்க ஜெபம

சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே, உமது பிதாவின் தன்மை பொருந்திய நன்மையினாலும் கருத்தினாலும் பூமியின் பலன்களை அதனதன் காலத்தில் கிருபையாக அளித்ததற்காக உமக்கு முழுமனதோடு நன்றி செலுத்துகிறோம். அவற்றை உமது நாம மகிமைக்காகவும் எங்கள் நலத்திற்காகவும் பிறரின் தேவைகளைத் துடைப்பதற்காகவும் சரியாக உபயோகிக்கக் கிருபை தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

 

நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது. மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரத்தையும், அவனுக்கு முகக் களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார். சங்கீதம் 104.13,15

The Holy Innocents (28 December)

 குற்றமில்லாப் பாலகருடைய திருநாள் (டிசம்பர் 28)

The Holy Innocents (28 December)

ஆரம்ப வசனம்

நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன். எரேமியா 31.13

 

சுருக்க ஜெபம்

பரம பிதாவே, தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருந்த போதிலும் ஏரோதுவின் கைகளில் பாலகர் துன்பம் அனுபவித்தனரே. நாங்கள் கொடூரமாய் நடக்காமலும் ஏனோதானோவென்று இருக்காமலும் பலமுள்ளவர்களன் கொடுமையில் துன்புறும் பலவீனரைத் தாங்கவும் எங்களுக்காக துன்புற்ற போதிலும் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றகிறவர்கள் இவர்களே. இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியான வருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். வெளிப்படுத்தின விசேஷம் 14.4

St. John the Evangelist (27 December)

சுவிசேஷகனாகிய பரிசுத்த யோவானின் திருநாள் (டிசம்பர் 27)

St. John the Evangelist (27 December)

ஆரம்ப வசனம்

அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சி கொடுத்து இவைகளை எழுதினான். அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம். பரி.யேவான் 21.24

 

சுருக்க ஜெபம்

இரக்கமுள்ள பிதாவே, உமது திருக்குமாரன் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறாரே. நாங்கள் எங்கள் மத்தியில் வந்துள்ள அந்த ஒளியில் நடக்கவும் கடைசியில் அவரை நித்திய ஜீவனுக்காக ஒளியாக அறிந்துகொள்ளவும் தக்கதாக, உமது அப்போஸ்தலனும் சுவிசேஷகனுமாகிய பரிசுத்த யோவான் உபதேசத்ததால் உமது திருச்சபையை வழிநடத்தியருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

அந்த வார்த்தை மாமிசமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். பரி.யோவான் 1.14, 16

St. Stephen the first Martyr (26 December)

முதல் இரத்தச் சாட்சியாகிய பரிசுத்த ஸ்தேவானுடைய திருநாள் (டிசம்பர் 26)

St. Stephen the first Martyr (26 December)

ஆரம்ப வசனம்

ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். அப்போஸ்தலர் 6.8

 

சுருக்க ஜெபம்

பரம பிதாவே, சிலுவையில் அறையுண்ட இயேசுவை நாங்களும் நோக்கவும், எங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்கவும் தக்கதாக, சத்தியத்திற்காக நாங்கள் படும் துன்பங்களில் உமது முதல் இரத்தச் சாட்சியான பரிசுத்த ஸ்தேவானின் முன்மாதிரியைப் பின்பற்ற எங்களுக்குக் கிருபை தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

மனுஷகுமாரன் தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதைக் காண்கிறேன். கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்றான். அப்போஸ்தலர் 7.56, 59

St. Andrew the Apostle (30 November)

அப்போஸ்தலனாகிய பரிசுத்த அந்திரேயாவின் திருநாள் (நவம்பர் 30)

St. Andrew the Apostle (30 November)

ஆரம்ப வசனம்

இயேசு, என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். பரி.மத்«யு 4.19

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது அப்போஸ்தலனாகிய பரிசுத்த அந்திரேயா உமது குமாரனின் அழைப்புக்கு உடனடியாக கீழ்ப்படியவும் தனது சகோதரனைத் தன்னோடு கொண்டுவரவும் அவருக்குக் கிருபை அருளினீரே. உமது பரிசுத்த வசனத்தால் அழைக்கப்படும் நாங்கள் தாமதமின்றி உம்மைப் பின் தொடரவும் உமது இராஜ்ஜியத்தின் நற்செய்தியை எடுத்துக்கூறவும், உமது கிருபையைத் தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

அந்திரேயா தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு, மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான். மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டு வந்தான். பரி.யோவன் 1.41, 42

Commemoration Of The Faithful Departed

சகல ஆத்துமாக்களின் ஞாபகார்த்தம்

Commemoration Of The Faithful Departed

ஆரம்ப வசனம்

இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோம். அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டு வருவார். 1 தெசலோனிக்கேயர் 4.14

 

சுருக்க ஜெபம்

இரக்கமுள்ள கடவுளே, உமது குமாரன் இயேசு கிறிஸ்து, விசுவாசிகள் யாவருக்கும் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறாரே. நாங்களும் மரித்த எங்கள் சகோதரர்களோடு கடைசியில் உமது நித்திய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கத்தக்கதாக, எங்களைப் பாவத்தின் மரணத்தினின்று நீதியின் ஜீவனைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக எழுப்பியருளவேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

என் மாமிசத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். பரி.யோவான் 6.54.

 

அல்லது

 

இயேசு அவனை நோக்கி, நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் என்றார். பரி.யோவான் 11.25, 26

All Saints' Day (1 November)

சகல பரிசுத்தவான்களின் திருநாள் (நவம்பர் 1)

All Saints' Day (1 November)

ஆரம்ப வசனம்

நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 19.5

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, நீர் தெரிந்துகொண்டவர்களை உம்முடைய குமாரனின் ஞான சரீரத்தில் ஒரே அன்னியோன்னியமாக இணைத்திருக்கிறீரே. உண்மையாய் உம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்காகத் தேவரீர் ஆயத்தம் பண்ணியிருக்கிற சொல்லி முடியாத சந்தோஷங்களை அடையும்படிக்கு நாங்கள் சன்மார்க்கமும், தேவபக்தி உள்ளவர்களுமாய் நடந்து, ஆசீர்வதிக்கப்பட்ட உம்முடைய பரிசுத்தவான்களைப் பின்தொடரும்படி கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம் போலவும், பலத்த அடிமுழக்கம் போலவும், ஒரு சத்தமுண்டாகி, அல்லேலூயா’ சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜியபாரம் பண்ணுகிறார். ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்படடவர்கள் பாக்கியவான்கள், என்றெழுது என்றான். வெளி. விசேஷம் 19.6,9

St. Simon and St. Jude, Apostles (28 October)

அப்போஸ்தலர்களாகிய பரிசுத்த சீமோன், பரிசுத்த யூதா ஆகியோரின் திருநாள் (அக்டோபர் 28)

St. Simon and St. Jude, Apostles (28 October)

ஆரம்ப வசனம்

பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெயம் பண்ணுங்கள். யூதா 20

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, இயேசு கிறிஸ்துவையே பிரதான மூலைக்கல்லாக வைத்து, அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திவாரத்தின் மேல் உமது திருச்சபையைக் கட்டி இருக்கிறீரே. நாங்கள் உமக்குப் பிரியமான பரிசுத்த ஆலயமாகும்படி அவர்களுடைய உபதேசத்தினால், ஆவியின் ஒருமையில் எங்களை ஒருவரோடு ஒருவராக இணைக்க வேண்டுமென்று எங்கள் ஆண்டரவாகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக, ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம் என்று சொன்னார். பரி.யோவான் 14.23

St. Luke the Evangelist (18 October)

சுவிசேஷகனாகிய பரிசுத்த லூக்காவின் திருநாள் (அக்டோபர் 18)

St. Luke the Evangelist (18 October)

 

ஆரம்ப வசனம்

இயேசுவானவர் எடுத்துக் கொள்ளப்பட்ட நாள் வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையும் குறித்து முதலாம் பிரபந்தத்தை லூக்கா உண்டு பண்ணினார். அப்போஸ்தலர் 1.2

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது குமாரனின் அன்பையும் குணமாக்கும் வல்லமையையும் பிரசித்தப்படுத்த வைத்தியனாகிய பரிசுத்தமாக்கும் வல்லமையையும் பிரசித்தப்படுத்த வைத்தியனாகிய பரிசுத்த லூக்காவை ஏவினீரே. ஆவியின் கிருபையினாலும், நற்செய்தியாகிய மருந்தின் மூலமாகவும் குணமாக்கும் அந்த அன்பையும் வல்லமையையும் உமது திருச்சபைக்காகத் தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி, உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறாரென்று, சீயோனக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. ஏசாயா 52.7

St. Michael and all Angels (29 September)

பரிசுத்த மிகாவேல் முதலான சகல தேவதூதர்களின் திருநாள்

St. Michael and all Angels (29 September)

ஆரம்ப வசனம்

கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள். சங்கீதம் 103.20

 

சுருக்க ஜெபம்

நித்திய ஆண்டவராகிய கடவுளே, தேவதூதரும் மனிதரும் செய்யும் பணிவிடைகளை அதிசயமான பிரகாரமாய் ஏற்படுத்தினவரே. உமது பரிசுத்த தூதர்கள் பரலோகத்தில் எப்பொழுதும் உம்மைச் சேவிப்பது போல, உமது கட்டளையின்படி அவர்கள் பூலோகத்திலும் எங்களை ஆதரித்துக் காப்பாற்றும்படி கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளகிறோம். ஆமென்.

 

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

உம்மை என் முழு இருதயத்தோடு துதிப்பேன். தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன். சங்கீதம் 138.1

St. Matthew the Apostle (21 September)

அப்போஸ்தலனாகிய பரிசுத்த மத்தேயுவின் திருநாள் (செப்டம்பர் 21)

St. Matthew the Apostle (21 September)

ஆரம்ப வசனம்

ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு, எனக்குப்பின் சென்றுவா என்றார். பரி.மத்தேயு 9.9

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்மையுள்ள கடவுளே, பரிசுத்த மத்தேயு சுயநலமான ஆதாயத்தைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு ஒரு அப்போஸ்தலனாகவும் சுவிசேஷகனாகவும் ஆகும்படி உமது குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் அழைத்தீரே, நாங்கள் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்தொடரும்படி, எங்களை எல்லா பற்றுகளிலும் பண ஆசையிலும் இருந்து பிரித்தருள வேண்டுமென்று, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

பின்பு அவர் வீட்டிலே போஜன பந்தியிருக்கையில், அநேக ஆயக்காரருரும் பாவிகளும் வந்து, இயேசுவோடு பந்தியிருந்தார்கள். இயேசு பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். பரி.மத்தேயு 9.10,12,13

The Blessed Virgin Mary (8 September)

பாக்கியவதியா கன்னிமரியாளின் திருநாள் (செப்டம்பர் 8)

The Blessed Virgin Mary (8 September)

 

ஆரம்ப வசனம்

விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப் பட்டவைகள் நிறைவேறும் என்றாள். பரி.லூக்கா 1.45

அல்லது

அதற்கு மரியாள், இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றான். பரி.லூக்கா 1.38

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, பாக்கியவதியாகிய கன்னி மரியாள் அவர்களை, உமது ஒரே குமாரனின் தாயாராகத் தெரிந்து கொண்டவரே, உமது ஒரே குமாரனின் இரத்ததினால் மீட்கப்பட்ட நாங்கள் அப்பாக்கியவதியோடு உமது நித்திய இராஜ்ஜியத்தின் மகிமையில் பங்கு பெற கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார். பரி.லூக்கா 11.28

அல்லது

மரியாளோ அந்தச் சங்கதிகளை யெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனை பண்ணினாள். பரி.லூக்கா .19

St. Bartholomew the Apostle (24 August)

அப்போஸ்தலனாகிய பரிசுத்த பர்த்தொலொமேயுவின் திருநாள் (ஆகஸ்டு 24)

St. Bartholomew the Apostle (24 August)

ஆரம்ப வசனம்

நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையைம் விவரித்துச் சொல்லுங்கள். சங்கீதம் 96.2,3

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது வசனத்தை உண்மையாய் விசுவாசிக்வும் பிரசங்கிக்கவும் உம்முடைய அப்போஸ்தலனாகிய பரிசுத்த பர்த்தொலொமேயுவுக்குக் கிருபை அளித்தீரே. அவர் நேசித்த அந்த உமது வசனத்தை உமது திருச்சபை நேசிக்கவும், அதை உண்மையென்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜியத்தை ஏற்படுத்தினது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜியத்திலே என் பந்தியில் போஜன பானம் பண்ணுவீர்கள் என்று இயேசு சொன்னார். பரி.லூக்கா 22.29, 30


The Transfiguration of our Lord (6 August)

நமது ஆண்டவருடைய மறுரூபத் திருநாள் (ஆகஸ்டு 6)

The Transfiguration of our Lord (6 August)

ஆரம்ப வசனம்

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். 11கொரிந்தியர் 4.6

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள பிதாவே, உமது திருக்குமாரன் சிலுவையில் மரணத்தை உத்தரிக்குமுன் மகிமையில் வெளிப்படுத்தப்பட சித்தங் கொண்டீரே, நாங்கள் அவரோடு கூட பாடனுபவிக்க பலப்படுத்தப் பட்டவர்களாய் மகிமையின் மேல் மகிமையடைந்து, அவருடைய சாயலில் மறுரூபமாகத் தக்கதாக, அவருடைய மகிமையை உணர்ந்து கொள்ள எங்களுக்கு விசுவாசத்தை அருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது. பரி.மத்தேயு 17.4

St. James the Apostle (25 July)

அப்போஸ்தலனாகிய பரிசுத்த யாக்கோபின் திருநாள் (ஜூலை 25)

St. James the Apostle (25 July)

ஆரம்ப வசனம்

இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், யாக்கோபையும், அவன் சகோதரன் யோவானையும் கண்டு, அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் அவருக்குப் பின் சென்றார்கள். பரி.மத்தேயு 4.18, 21

 

சுருக்க ஜெபம்

இரக்கமுள்ள கடவுளே, உம்முடைய அப்போஸ்தலனாகிய பரிசுத்த யாக்கோபு தன்னுடைய தகப்பனையும், தனக்குண்டான யாவற்றையும் விட்டுவிட்டு, தனது மரண பரியந்தம் உமது குமாரன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினதுபோல, நாங்களும் எங்கள் எல்லா சுயநலமான ஆசைகளையும் வெறுத்துவிட்டு, உம்முடைய அழைப்புக்கு எப்பொழுதும் இணங்க ஆயத்தமாயிருக்க கிருபை செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

இயேசு அவர்களை நோக்கி என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், ஆனாலும் என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி, அதை அருளுவது என் காரியமல்ல என்றார். பரி.மத்தேயு 20.23

St. Mary Magdalen (22 July)

பரிசுத்த மகதலேனா மரியாளின் திருநாள் (ஜூலை 22)

St. Mary Magdalen (22 July)

 

ஆரம்ப வசனம்

வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்தாள். பரி.யோவான் 20.1

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது குமாரன், மகதலேனா மரியாளுக்கு மனதிலும் சரீரத்திலும் சுகமளித்து அவருடைய உயிர்த்தெழுதலுக்கு அவர் சாட்சியாயிருக்கும்படி அழைத்தாரே. அவருடைய உயிர்த்தெழுந்த ஜீவனின் வல்லமையால் உம்மைச் சேவிக்கும்படி உம்முடைய கிருபையினால் எங்களை மன்னித்து குணமாக்கியருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் இப்பொழுதும் எப்பொழுதும் ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

இயேசு அவளை நோக்கி, மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து, ரபூவி என்றாள். அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். பரி.யோவான் 20.16

St. Thomas the Apostle (3 July)

அப்போஸ்தலனாகிய பரிசுத்த தோமாவின் திருநாள் (ஜூலை 3)

St. Thomas the Apostle (3 July)

ஆரம்ப வசனம்

அதற்கு இயேசு, தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய். காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். பரி.யோவான் 20.29

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே, எங்களுடைய விசுவாசம் உறுதிப்படும்படியாக, உமது அப்போஸ்தலனாகிய பரிசுத்த தோமா, வார்த்தையும் கண்ணால் காண்பதினால் காட்சியும் தன்னை உறுதிப்படுத்தும் வரை உம்முடைய குமாரனின் உயிர்த்தெழுதலைக் குறித்து சந்தேகப்பட அனுமதித்தீரே, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்ணால் காணாத நாங்கள் அவரை விசுவாசிக்கவும், கிறிஸ்துவின் பூரண ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளவும் எங்களுக்குக் கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் இப்பொழுதும் எப்பொழுதும் ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக, 'என் ஆண்டவரே, என் தேவனே’ என்றான். பரி.யோவான் 20.28

St. Peter the Apostle (29 June)

அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுருவின் திருநாள் (ஜூன் 29)

St. Peter the Apostle (29 June)

ஆரம்ப வசனம்

இயேசு பேதுருவை நோக்கி, நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன். நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். பரி.லூக்கா 22.32

அல்லது

அப்பொழுது அவர், நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான். பரி.லூக்கா 9.20

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, இயேசவே கிறிஸ்து என்றும் ஜீவனுள்ள கடவுளாகிய உமது குமாரன் என்றும் அறிக்கை செய்யும்படி உமது அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுருவை ஏவினீரே, உம்முடைய திருச்சபை, ஒருமையிலும் சமாதானத்திலும் ஒரே சத்தியத்தைப் பிரஸ்தாபிக்கவும், உம்முடைய குமாரனும் எங்கள் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவாகிய ஒரே ஆண்டவரைப் பின் தொடரவும் அந்தத் திருச்சபையை அந்த விசுவாசத்தின் கண்மலையின் மேல் கட்டியருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் இப்பொழுதும் எப்பொழுதும் ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிற அந்த இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

இயேசு சீமோன் பேதுருவை நோக்கி, யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். பேதுரு, ஆண்டவரே நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். பரி.யோவான் 21.15, 17

The birth of St. John the Baptist (24 June)

பரிசுத்த யோவான் ஸ்நானகனின் பிறப்பு (ஜூன் 24)

The birth of St. John the Baptist (24 June)

ஆரம்ப வசனம்

தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான். அவன் பெயர் யோவான். அவன் அந்த ஒளியைக் குறித்துச் சாட்சி கொடுக்கச் சாட்சியாய் வந்தான். பரி.யோவான் 1.6,7

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது குமாரனின் வருகைக்காக வழியை ஆயத்தம் பண்ணுவதின் மூலம் உமது நோக்கத்தை நிறைவேற்ற உமது பணிவிடைக்காரனாகிய பரிசுத்த யோவான் ஸ்நானகன் ஆச்சரியமான விதமாய்ப் பிறந்தாரே, அவர் போதித்தபடி நாங்கள் மனந்திரும்பவும் அவருடைய முன்மாதிரியின்படி எப்பொழுதும் சத்தியத்தைச் சொல்லி, துன்மார்க்கத்தைத் தைரியமாய்க் கண்டித்து, சத்தியத்தினிமித்தம் வரும் துன்பத்தைப் பொறுமையோடு சகிக்கவும் எங்களை வழி நடத்தியருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

தேவனுடைய இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது. பரி.லூக்கா 1.79.

St. Barnabas the Apostle (11 June)

அப்போஸ்தலனாகிய பரிசுத்த பர்னபாவின் திருநாள் (ஜூன் 11)

St. Barnabas the Apostle (11 June)

ஆரம்ப வசனம்

பர்னபா நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாய் இருந்தான். அப்போஸ்தலர் 11.24

 

சுருக்க ஜெபம்

எங்கள் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கடவுளே, பெற்றுக் கொள்ளுவதைவிட கொடுப்பதே மிகவும் நலமானது என்று உம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்து எங்களுக்குப் போதித்திருக்கிறாரே. உமது அப்போஸ்தலனாகிய பரிசுத்த பர்னபாவின் முன்மாதிரியைப் பின்பற்றி, பிறரை நியாயந்தீர்ப்பதில் தாரளமாயிருக்கவும், எங்களுடைய சேவையில் சுயநலமற்றவர்களாய் இருக்கவும், எங்களுக்கு உதவிபுரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை. நான் உங்களை சிநேகிதர் என்றேன். ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன் என்று இயேசு சொன்னார். பரி.யோவான் 15.15

St. Mathias the Apostle (14 May)

அப்போஸ்தலனாகிய பரிசுத்த மத்தியாவின் திருநாள் (மே 14)

St. Mathias the Apostle (14 May)

ஆரம்ப வசனம்

நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நான் உங்களைத் தெரிந்து கொண்டேன். என்று இயேசு சொன்னார். நீங்கள் போய்க் கனி கொடுங்கள். உங்கள் கனி நிலைத்திருக்கும். பரி.யோவான் 15.16

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரா ருக்கும்படி உண்மையுள்ள உம்முடைய பணிவிடைக்காரனாகிய பரிசுத்த மத்தியாவைத் துரோகியாகிய யூதாசுக்குப் பதிலாகத் தெரிந்து கொண்டீரே. கள்ள அப்போஸ்தலர்கள் அணுகாதபடி எப்பொழுதும் உமது திருச்சபையைக் காப்பாற்றி, விசுவாசமுள்ள மேய்ப்பர்களும் போதகர்களும் செய்யும் பணிவிடையினால், எங்களை உமது சத்தியத்தில் உறுதியாய்ப் பாதுகாத்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. பரி.யோவான் 15.12

St. Philip and St. James, Apostles (1 May)

அப்போஸ்தலர்களாகிய பரிசுத்த பிலிப்பு, பரிசுத்த யாக்கோபு ஆகியோரின் திருநாள் (மே 1)

St. Philip and St. James, Apostles (1 May)

ஆரம்ப வசனம்

நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக அதைச் செய்வேன் என்று இயேசு சொன்னார். பரி.யோவான் 14.13

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உம்மை மெய்யாய் அறிந்துகொள்ளுவதே நித்திய ஜீவன். உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, வழியும் சத்தியமும் ஜீவனுமாய் அறிவதினால் உமது அப்போஸ்தலர்களாகிய பரிசுத்த பிலிப்பு, பரிசுத்த யாக்கோபு என்பவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து உமது மகிமைக்கு நடத்துகிற வழியில் உறதியாய் நடக்க எங்களுக்குப் போதிக்க வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

பிலிப்பு அவரை நோக்கி ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்றார். பரி.யோவான் 14.8,9