Thursday, December 22, 2022

5th Sunday After Pentecost

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 5ம் ஞாயிறு

5th Sunday After Pentecost

ஆரம்ப வசனம்

முதல் வருடம்

ஒருவரிடத்திலொருவர் அன்பு கூறுகிற கடனேயல்லாமல், மற்றொருன்றிலும் ஒருவனுக்கும் கடன் படாதிருங்கள். பிறனிடத்தில் அன்பு கூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். ரோமர் 13.8

இரண்டாம் வருடம்

இதோ வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள். பரி.யோவான் 4.35

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல கடவுளே, வழி தப்பினவர்கள் நீதிமார்க்கத்தில் திரும்பி வரும்படி உமது சத்தியத்தின் வழியைக் காட்டினீரே. கிறிஸ்து மார்க்கத்தின் ஐக்கியத்தில் சேர்க்கப்பட்டிருக்கிற யாவரும் தங்கள் மார்க்கத்துக்கு ஏற்காதவைகளை விலக்கிப் போடவும் அதற்கு ஏற்ற யாவையும் பின்பற்றி நடக்கவும் கிருபை செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

முதல் வருடம்

அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது. என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன். நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாய் இருப்பார்கள். எபிரெயர் 8.10

இரண்டாம் வருடம்

அப்பொழுது இயேசு, வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள். பரி.மத்தேயு 28.18,19

No comments:

Post a Comment