Thursday, December 22, 2022

Seventh Sunday before Easter

 கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 7ம் ஞாயிறு

(லெந்து காலத்திற்கு முன்வரும் முதலாம் ஞாயிறு)

Seventh Sunday before Easter

ஆரம்ப வசனம்

கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் உள்ளவர். அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளில் மேலுமுள்ளது. சங்கீதம் 145.8-9

 

சுருக்க ஜெபம்

இரக்கமுள்ள ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிற ஜனமாகிய நாங்கள் சகல பாவங்களும் அறச் சுத்திகரிக்கப்படுவதற்கும், அமைதலான மனதோடு உமக்கு ஊழியஞ்செய்வதற்கும், எங்களுக்குப் பாவமன்னிப்பையும் சமாதானத்தையும் அருளிச் செய்ய வேண்டுமென்று எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

மனந்திரும்புங்கள். அப்பொழுது பிழைப்பீர்கள். சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல் 18.32

No comments:

Post a Comment