Wednesday, December 21, 2022

Epiphany 5

 பிரசன்னத் திருநாளுக்குப் பின்வரும் 5ம் ஞாயிறு

Epiphany 5

ஆரம்ப வசனம்

எவர்கள் அழைக்கப் பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவ ஞானமுமாயிருக்கிறார். 1 கெரிந்தியர் 1.24

 

சுருக்க ஜெபம்

ஆண்டவரே, உம்மாலேயன்றி நன்மையானதொன்றையும் செய்யத் திராணியற்றவர்களாகிய நாங்கள், உமது சித்தத்தின்படி நடக்க உம்மாலே திராணியுள்ளவர்களாகும்படி, செம்மையானவைகளை எப்பொழுதும் சிந்திக்கவும், செய்யவும் தக்க மனதை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவ ஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுகளில் ஒருவனும் அறியவில்லை. அறிந்தார்களானால் மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. 1 கொரிந்தியர் 2.7,8.

No comments:

Post a Comment