பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 8ம் ஞாயிறு
8th Sunday
After Pentecost
நல்ல மரம் கெட்ட
கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. ஆதலால்,
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். மத்தேயு 7.18, 20
சுருக்க ஜெபம்
உமது பரிசுத்த ஆவியை
எங்கள் ஜீவனுக்கும் வெளிச்சத்திற்கும் தந்த சர்வ வல்லமையுள்ள தேவனே: எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அன்பு, சந்தோஷம், சமாதானம் ஆகிய கனிகளைக் கொண்டுவர அவர் கிருபையின் செல்வத்தில் எங்கள்
உள்ளங்களைத் திறந்தருளும்.
நற்கருணைக்குப் பிந்திய
வசனம்
முற்காலத்தில் நீங்கள்
அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்;
வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். எபசியர் 5.8, 9
No comments:
Post a Comment