Thursday, December 22, 2022

4th Sunday After Pentecost

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 4ம் ஞாயிறு

4th Sunday After Pentecost

ஆரம்ப வசனம்

முதல் வருடம்

சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள். 1பேதுரு 2.16

இரண்டாம் வருடம்

உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். பரி.லூக்கா 14.33

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல கடவுளே, நீர் பாவத்தின் கொடுமையை முறித்து உம்மை நாங்கள் பிதாவே என்று அழைக்கத்தக்கதாக உமது திருக்குமாரனின் ஆவியை எங்கள் இருதயங்களில் அனுப்பினீரே. எல்லா மானிடரும் உமது பிள்ளைகளின் மகிமை பொருந்திய விடுதலைக்குள் கொண்டுவரப் படத்தக்கதாக எங்களுடைய சுயாதீனத்தை உமக்குப் படைக்கும்படி கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்தவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

முதல் வருடம்

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். பரி.யோவான் 8.36

இரண்டாம் வருடம்

அப்பொழுது அவன் தன் ஊழியக்காரரை நோக்கி, நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றான். பரி.மத்தேயு 22.8,9

No comments:

Post a Comment