கிறிஸ்து பிறந்த திருநாளுக்கு முன்வரும் 4ம் ஞாயிறு
வருகையின் ஞாயிறு
Advent Sunday
ஆரம்ப வசனம்
நித்திரையை விட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்று. நாம்
விசுவாசிகளான போது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது
நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. ரோமர் 13.11
சுருக்க ஜெபம்
சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய
குமாரனாகிய இயேசுகிறிஸ்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்கச் சிறந்த
மகத்துவத்தோடே திரும்பவரும் கடைசி நாளிளே, நாங்கள்
உயிர்த்தெழுந்து சந்திக்க வந்த சாவுக்கீனமாக இந்த ஜீவகாலத்தில், நாங்கள் அந்தகாரத்தின் கிரியைகளைத் தள்ளிவிட்டு, ஒளியின்
ஆயுதங்களைத் தரித்துகொள்ள கிருபைசெய்ய வேண்டுமென்று, உம்மோடும்
பரிசுத்த ஆவியோடும் இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
மனுஷ குமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு
எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் என்றார். பரி.லூக்கா 21.36
No comments:
Post a Comment