Thursday, December 22, 2022

Easter 1

கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் முதலாம் ஞாயிறு

Easter 1

ஆரம்ப வசனம்

முதல் வருடம்

சீஷர்கள் கூடியிருந்த இடத்தில் இயேசு வந்து நடுவே நின்று 'உங்களுக்குச் சமாதானம்' என்றார். அல்லேலூயா. பரி.யோவான் 20.19

 

இரண்டாம் வருடம்

குமாரனைக் கண்டு அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும் என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். அல்லேலூயா. பரி.யோவன் 6.40

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல பிதாவே, உமது மிகுந்த இரக்கத்தினாலும் உயிர்த்தெழுந்த ஆண்டவரின் தரிசனத்தினாலும் சீஷர்களை மகிழ்வித்தவரே. எங்களோடிருக்கும் அவருடைய பிரசன்னத்தை அறிவதின் மூலம் அவருடைய உயிர்த்தெழுந்த வாழக்கையினால் நாங்கள் பலப்படவும், தாங்கப்படவும், நீதியிலும் சத்தியத்திலும் உம்மை இடைவிடாது சேவிக்கவும் கிருபை தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள். அல்லேலூயா. 1 பேதுரு 2.3

 

இயேசு அவர்களை நோக்கி, ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருகாலும் பசியடையான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருகாலும் தாகமடையான். அல்லேலூயா. பரி.யோவன் 6.35

No comments:

Post a Comment