அப்போஸ்தலனாகிய பரிசுத்த மத்தேயுவின் திருநாள் (செப்டம்பர் 21)
St.
Matthew the Apostle (21 September)
ஆரம்ப வசனம்
ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு, எனக்குப்பின் சென்றுவா என்றார். பரி.மத்தேயு 9.9
சுருக்க ஜெபம்
சர்வ வல்மையுள்ள கடவுளே, பரிசுத்த
மத்தேயு சுயநலமான ஆதாயத்தைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு ஒரு அப்போஸ்தலனாகவும்
சுவிசேஷகனாகவும் ஆகும்படி உமது குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் அழைத்தீரே,
நாங்கள் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்
அடிச்சுவடுகளைப் பின்தொடரும்படி, எங்களை எல்லா பற்றுகளிலும்
பண ஆசையிலும் இருந்து பிரித்தருள வேண்டுமென்று, உம்மோடும்
பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை
முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
பின்பு அவர் வீட்டிலே போஜன பந்தியிருக்கையில், அநேக ஆயக்காரருரும் பாவிகளும் வந்து, இயேசுவோடு பந்தியிருந்தார்கள். இயேசு பிணியாளிகளுக்கு
வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல,
பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
பரி.மத்தேயு 9.10,12,13
No comments:
Post a Comment