Thursday, December 22, 2022

19th Sunday After Pentecost

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 19ம் ஞாயிறு

19th Sunday After Pentecost

ஆரம்ப வசனம்

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். 2கொரி.5.6

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல நித்திய கடவுளே, பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி நாங்கள் உமது கற்பனைகளின் வழியாய் ஓடி நித்திய சந்தோஷத்தின் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக எங்களில் உம்மைப் பற்றும் விசுவாசத்தின் நல் ஈவுகளைப் பெருகச்செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

சகோதரரே நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறேன். ரோமர் 12.1

No comments:

Post a Comment