கிறிஸ்து பிறந்த திருநாள்
Christmas
Day
ஆரம்ப வசனம்
(இரவில்)
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண
இருளின் தேசத்தில் கூடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது. ஏசாயா 9.2
(அதிகாலையில்)
இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும்
நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும்
இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பரி.லூக்கா 2.10,11
(காலையில்)
நமக்கு ஒரு பாலகள் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன்
கொடுக்கப்பட்டார். அவர் நாமம் சமாதானப் பிரபு எனப்படும். எசாயா 9.6
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல கடவுளே, பரம
இராஜாவே, உமது திருக்குமாரன் மனுஷத்தன்மையைத்
தரித்துக்கொள்ளவும், கற்புள்ள கன்னிகையிடத்தில் பிறக்கவும்
அவரை இவ்வுலகிற்கு அனுப்பினதற்காக உமக்கு எல்லா துதியும் உண்டாவதாக. நாங்கள்
அவரில் மறுபடியும் பிறந்ததுபோல, அவர் தொடர்ந்து எங்களில்
வாசம் பண்ணவும், அவர் பரலோகத்தில் அரசாளுவதுபோல பூமியிலேயும்
அரசாளவும் இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்
கொள்ளகிறோம். ஆமென்.
நித்திய கடவுளே, இந்த
மிக பரிசுத்தமான இரவை உம்முடைய ஒரே மெய்யான ஒளியினால் பிரகாசமாய் ஜொலிக்கப்
பண்ணினீரே. உலகில் பிரகாசித்த அந்த ஒளியை அறிந்திருக்கிற நாங்கள், உம்முடைய பரலோக மகிமையின் பிரகாசத்தைக் காண, எங்களைக்
கொண்டுவர வேண்டும் என்று எங்கள் ஆண்டராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய்
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
(இரவில்)
மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி, நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக்
கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வருங்கள்
என்றார்கள். பரி.லூக்கா 2.15
(அதிகாலையில்)
அந்த வார்த்தை மாமிசமாகி, கிருபையினாலும்
சத்தியத்தினாலும் நிறைந்தவராய், உமக்குள்ளே வாசம்பண்ணினார்.
அவருடைய மகிமையைக் கண்டோம். பரி.யோவான் 1.14
(பகலில்)
வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு
ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார். பரி.யோவான் 6.33
No comments:
Post a Comment