பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 15ம் ஞாயிறு
15th Sunday
After Pentecost
ஆரம்ப வசனம்
நீங்கள் மனுஷனுடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம்
கீழ்ப்படியுங்கள். 1பேதுரு 2.13
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல கடவுளே, எல்லாவற்றிற்கும்
இராஜாவாயிருக்கிற உமது அன்பின் குமாரன் மூலமாய் எல்லாவற்றையும் மீட்டுக்கொள்ளுகிறவரே,
அதிகாரம் வகிப்போர் யாவருடைய இருதயத்தையும், மனதையும்
ஆண்டு, பாவத்தின் கோரத்தால் பிரிக்கப்பட்டு, பிளவுபட்டு இருக்கும் தேசங்களின் மக்கள் அனைவரையும், அவருடைய நீதியும் சமாதானமுமான ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டுமென்று
உம்மோடும், பரிசுத்த ஆவியோடும், இப்பொழுதும்
எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய வேண்டிக்கொள்ளுகிறோம்.
ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
அப்பொழுது உலகத்தின் ராஜியங்கள் நம்முடைய கர்த்தருக்கும் அவருடைய
கிறிஸ்துவுக்குமுரிய ராஜியங்களாயின. அவர் சதா காலங்களிலும் ராஜியபாரம் பண்ணுவார்.
வெளிப்படுத்தல் 11.15
No comments:
Post a Comment