கிறிஸ்து பிறந்த திருநாளுக்கு முன்வரும் 5ம் ஞாயிறு
(வருகையின் ஞாயிறுக்கு முன்வரும் ஞாயிறு)
Fifth
Sunday before Christmas
ஜனங்களுக்குக் கொடியாக
நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள். அவருடைய தாபரஸ்தலம்
மகிமையாயிருக்கும். ஏசாயா 11.10
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல கடவுளே, உமது
சித்தத்தையும் நோக்கத்தையும் அறிவிக்க உமது தீர்க்கர்கள் வழியாகப் பேசினாரே. ஒரு
சிலரின் மெய்யான சாட்சியினால், உலகிலுள்ள உமது பிள்ளைகள்
பரிசுத்தவான்களோடு மகிமையில் ஒன்றாக, உமது சத்தியத்தின்
காவலர்களை ஏவி எழுப்பியருள வேண்டும் என்று, தமது
வல்லமையினாலே மானிடரை இரட்சித்து, உம்மோடும் பரிசுத்த
ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப்
பின்வரும் வசனம்
கர்த்தராகிய யேகோவா என்
பெலனும், என் கீதமுமானவர். அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணுங்கள், அவர் மகத்துவமான
கிரியைகளைச் செய்தார். இது பூமியெங்கும் அறியப்படக் கடவது என்பீர்கள். ஏசாயா
12.2,5
No comments:
Post a Comment