Thursday, December 22, 2022

18th Sunday After Pentecost

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 18ம் ஞாயிறு

18th Sunday After Pentecost

ஆரம்ப வசனம்

வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்யுங்கள். கொலோசெயர் 3.17

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல கடவுளே, நீர் எங்களை உமக்காக உண்டு பண்ணினீர். உம்மில் இளைப்பாறுதல் கண்டடையும் வரை எங்கள் இருதயங்கள் இளைப்பாறுதல் அடைவதில்லை. நாங்கள் இம்மையிலே உமது சமாதானத்தை அடையவும், மறுமையிலே உம்மை முகமுகமாய்த் தரிசிக்கும் பாக்கியத்தை அடையவும் எங்களை உமது ஊழியத்திற்கென்று ஒப்படைக்கவும் எங்களுக்குப் போதித்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1

No comments:

Post a Comment