Thursday, December 22, 2022

Easter 2

கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் இரண்டாம் ஞாயிறு

Easter 2

ஆரம்ப வசனம்

முதல் வருடம்

மோசே முதலிய சகல தீர்க்க தரிசிகளும் எழுதின வேத வாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அல்லேலூயா பரி.லூக்கா 24.27

 

இரண்டாம் வருடம்

நானே நல்ல மேய்ப்பன். நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவகளால் அறியப்பட்டுமிருக்கிறேன், என்று இயேசு சொன்னார். அல்லேலூயா. பரி.யோவான் 10.14,15

 

சுருக்க ஜெபம்

சமாதானத்தின் கடவுளே, நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணினவரே, உமக்குப் பிரியமானதை எங்களில் நடப்பித்து, நாங்கள் உம்முடைய சித்தத்தின்படிச் செய்ய எங்களைச் சகலவித நற்கிரியைகளிலும் சீர்பொருந்தினவர்களாக்க வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிய்க்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள். அல்லேலூயா. பரி.லூக்கா 24.35

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். அல்லேலூயா. பரி.யோவான் 10.10

No comments:

Post a Comment