அப்போஸ்தலர்களாகிய பரிசுத்த சீமோன், பரிசுத்த யூதா ஆகியோரின் திருநாள் (அக்டோபர் 28)
St.
Simon and St. Jude, Apostles (28 October)
ஆரம்ப வசனம்
பிரியமானவர்களே, உங்கள்
மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெயம் பண்ணுங்கள். யூதா 20
சுருக்க ஜெபம்
சர்வ வல்லமையுள்ள கடவுளே, இயேசு
கிறிஸ்துவையே பிரதான மூலைக்கல்லாக வைத்து, அப்போஸ்தலர்கள்
தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திவாரத்தின் மேல் உமது திருச்சபையைக் கட்டி
இருக்கிறீரே. நாங்கள் உமக்குப் பிரியமான பரிசுத்த ஆலயமாகும்படி அவர்களுடைய
உபதேசத்தினால், ஆவியின் ஒருமையில் எங்களை ஒருவரோடு ஒருவராக
இணைக்க வேண்டுமென்று எங்கள் ஆண்டரவாகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக, ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக்
கைக்கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து
அவனோடே வாசம் பண்ணுவோம் என்று சொன்னார். பரி.யோவான் 14.23
No comments:
Post a Comment