முதல் இரத்தச் சாட்சியாகிய பரிசுத்த ஸ்தேவானுடைய திருநாள் (டிசம்பர் 26)
St.
Stephen the first Martyr (26 December)
ஆரம்ப வசனம்
ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய்
ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். அப்போஸ்தலர் 6.8
சுருக்க ஜெபம்
பரம பிதாவே, சிலுவையில்
அறையுண்ட இயேசுவை நாங்களும் நோக்கவும், எங்களைத்
துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்கவும் தக்கதாக, சத்தியத்திற்காக
நாங்கள் படும் துன்பங்களில் உமது முதல் இரத்தச் சாட்சியான பரிசுத்த ஸ்தேவானின்
முன்மாதிரியைப் பின்பற்ற எங்களுக்குக் கிருபை தந்தருள வேண்டுமென்று எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
மனுஷகுமாரன் தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதைக் காண்கிறேன்.
கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்
என்றான். அப்போஸ்தலர் 7.56, 59
No comments:
Post a Comment