லெந்து காலத்தில் 3ம் ஞாயிறு
(கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 4ம் ஞாயிறு)
Lent
3
ஆரம்ப வசனம்
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான். நொறுங்குண்டதும், நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
சங்கீதம் 51.17
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல கடவுளே, உமது
மிகுந்த அன்புள்ள குமாரன் மகிழ்வடையுமுன், முதலில் பாடுபட்டு, மகிமையினுள்
பிரவேசிக்கும் சிலுவையின் மரணத்தை உத்தரித்தாரே. நாங்கள் சிலுவையின் பாதையில்
நடந்து, அது ஜீவனுக்கும் சமாதானத்திற்கும் வழி என்பதைக்
கண்டு கொள்ள இரக்கமாய்க் கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடே நிலைத்திருந்தவர்கள் நீங்களே.
நீங்கள் என் ராஜ்ஜியத்திலே என் பந்தியில் போஜனபானம் பண்ணுவீர்கள் என்று இயேசு
கூறினார். பரி. லூக்கா 22.28.30
No comments:
Post a Comment