Wednesday, December 21, 2022

Seventh Sunday before Christmas

 கிறிஸ்து பிறந்த திருநாளுக்கு முன்வரும் 7ம் ஞாயிறு

(வருகையின் ஞாயிறுக்கு முன்வரும் 3ம் ஞாயிறு) பச்சை நிறம்

Seventh Sunday before Christmas

ஆரம்ப வசனம்

அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி ஆபிரகாம் நம்மெல்லாருக்கும் தகப்பனானான். ரோமர் 4.16,17

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல கடவுளே, உம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட உமது ஊழியன் ஆபிரகாம், தன்வழி பூமியிலுள்ள குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்பட, உமது அழைப்புக்கு உண்மையோடு கீழ்ப்படிந்து, உமது வாக்குத் தத்தத்தில் மகிழ்ந்தாரே, எங்களில் உமது வாக்குத்தத்தம் நிறைவேறத் தக்கதாக அவருடைய விசுவாசத்தைப் போன்ற விசுவாசத்தை எங்களுக்கும் தந்தருள வேண்டும் என்று, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும் படி அழைக்கப்பட்டபோது, கீழப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனான். எபிரேயர் 11.8.

No comments:

Post a Comment