அப்போஸ்தலனாகிய பரிசுத்த தோமாவின் திருநாள் (ஜூலை 3)
St.
Thomas the Apostle (3 July)
ஆரம்ப வசனம்
அதற்கு இயேசு, தோமாவே,
நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய். காணாதிருந்தும்
விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். பரி.யோவான் 20.29
சுருக்க ஜெபம்
சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே, எங்களுடைய விசுவாசம் உறுதிப்படும்படியாக, உமது
அப்போஸ்தலனாகிய பரிசுத்த தோமா, வார்த்தையும் கண்ணால்
காண்பதினால் காட்சியும் தன்னை உறுதிப்படுத்தும் வரை உம்முடைய குமாரனின்
உயிர்த்தெழுதலைக் குறித்து சந்தேகப்பட அனுமதித்தீரே, உயிர்த்தெழுந்த
கிறிஸ்துவைக் கண்ணால் காணாத நாங்கள் அவரை விசுவாசிக்கவும், கிறிஸ்துவின்
பூரண ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளவும் எங்களுக்குக் கிருபை
செய்தருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் இப்பொழுதும் எப்பொழுதும் ஒரே
கடவுளாக ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக, 'என் ஆண்டவரே, என் தேவனே’ என்றான். பரி.யோவான் 20.28
No comments:
Post a Comment