அறுப்பின் பண்டிகை Thanksgiving Service
ஆரம்ப வசனம்
பூமி தன் பலனைத் தரும். தேவனாகிய எங்கள் தேவனே எங்களை
ஆசீர்வதிப்பார். சங்கீதம் 67.6.
சுருக்க ஜெபம
சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே, உமது பிதாவின் தன்மை பொருந்திய நன்மையினாலும் கருத்தினாலும் பூமியின்
பலன்களை அதனதன் காலத்தில் கிருபையாக அளித்ததற்காக உமக்கு முழுமனதோடு நன்றி
செலுத்துகிறோம். அவற்றை உமது நாம மகிமைக்காகவும் எங்கள் நலத்திற்காகவும் பிறரின்
தேவைகளைத் துடைப்பதற்காகவும் சரியாக உபயோகிக்கக் கிருபை தந்தருள வேண்டுமென்று
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது. மனுஷனுடைய
இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரத்தையும், அவனுக்கு முகக் களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய
இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார். சங்கீதம் 104.13,15
No comments:
Post a Comment