கிறிஸ்து பிறந்த திருநாளுக்குப் பின்வரும் 2ம் ஞாயிறு
Christmas
2
ஆரம்ப வசனம்
எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது
பிரசன்னமாகிற்று. தீத்து 2.11
சுருக்க ஜெபங்கள்
பரமபிதாவே, உமது
திருக்குமாரன் நாசரேத்தில், ஒரு இவ்வுலக குடும்பத்தில்
வாழ்க்கை அனுபவித்தாரே. நாங்கள் அன்பினாலும் கீழ்ப்படிதலினாலும் ஐக்கியப்பட்ட ஒரு
பரிசுத்த குடும்பமாக வாழவும், கடைசியில் எங்கள் பரமவீட்டில்
சேரவும் கிருபை செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
நித்திய கடவுளே, ஒரு
நட்சத்திரத்தின் ஒளியினாலும் ஞானிகளை வழி நடத்தி அவர்கள் உமது திருக்குமாரனை
ஆராதிக்கச் செய்தீரே. உலகமுழுவதும் உமது மகிமையைக் காணத்தக்கதாக அவருடைய ஒளியினால்
இவ்வுலகிலுள்ள சகல தேசங்களையும் வழி நடத்த வேண்டும் என்று, எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே
பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும்
அவர்மேல் இருந்தது. பரி.லூக்கா 2.40
No comments:
Post a Comment