EIGHT
SUNDAY BEFORE EASTER
(லெந்து காலத்திற்கு முன்வரும் 2ம் ஞாயிறு)
ஆரம்ப வசனம்
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்.
சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்
பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயம் கட்டினார். ஏசாயா 61.1
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல நித்திய கடவுளே, உமது
திருக்குமாரன் இயேசு கிறிஸ்து வியாதியஸ்தரைக் குணமாக்கி, வாழ்க்கையின்
பூரணத்துவத்தை மீண்டும் அவர்களுக்கு அளித்தாரே. இவ்வுலகத்தின் கொடுந்துயரத்தை உமது
மிகுந்த இரக்கத்தினால் கண்ணோக்கிப் பார்த்து, சுகமளிக்கும்
உமது வல்லமையினால், மானிடரையும் தேசங்களையும் பூரணமாக்க
வேண்டும் என்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும்
ஜீவித்து அரசாளுகிற எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்
பரி.நற்ருணைக்குப் பின்வரும் வசனம்
எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார். செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் பண்ணுகிறார். பரி.மாற்கு 7.37
No comments:
Post a Comment