Thursday, December 22, 2022

கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளாகிய ஈஸ்தர் பண்டிகை

கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளாகிய

ஈஸ்தர் பண்டிகை

 

நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து, நமக்காக அடிக்கப்பட்டிருக்கிறாரே.

ஆதலால், பழைய புளித்த மாவோடே அல்ல, துர்க்குணம், பொல்லாப்பு என்னும் புளித்த மாவோடும் அல்ல, துப்புரவு, உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக் கடவோம். 1கொரி.5.7

 

மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை. மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.

 

அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார். அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.

 

அப்படியே நீங்களும் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்காளகவும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். ரோமர் 6.9

 

கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்த நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

 

மனுஷனால் மரணம் உண்டானபடியால் மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.

 

ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல கிறிஸ்துவுக்குள் எல்லாம் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 1கொரி.15.20

 

பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.

 

ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

No comments:

Post a Comment