பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 11ம் ஞாயிறு
11th Sunday
After Pentecost
ஆரம்ப வசனம்
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள
ஆவியையே கொடுத்திருக்கிறார். 2 தீமோ. 1.7
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல பிதாவே, எங்களுடைய
சகோதர்களில் மிகவும் சிறியவனுக்குச் செய்வது எதுவோ அது அவருக்கே செய்யப்பட்டது
என்று உமது குமாரன் இயேசு கிறிஸ்து எங்களுக்குப் போதித்திருக்கிறாரே. அவர்
யாவருக்கும் ஊழியஞ் செய்யும் நல்லெண்ணத்தைத் தந்தருள வேண்டுமென்று எங்களுக்காகத
தமது ஜீவனைக் கொடுத்து மரித்தும், உம்மோடும் பரிசுத்த
ஆவியோடும் ஜீவித்து அரசாளுகிற இயேசுகிறிஸ்துவின் மூலமாய்
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள்.
நீங்கள் சொல்லுகிறது சரியே, நான்
அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். பரி.யோவன் 13.13, 14
No comments:
Post a Comment