பெரிய வௌ¢ளிக்கிழமை
Good
Friday
ஆரம்ப வசனம்
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன்
நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5.8
சுருக்க ஜெபங்கள்
சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்கள்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், தேவரீருடைய வீட்டாராகிய
எங்களுக்காகக் காட்டிக்கொடுக்கப்படவும், அக்கிரமக்காரருடைய
கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும் சிலுவையில் மரணமடையவும மனதார சம்மதித்ததினிமித்தம்,
எங்களைக் கிருபையோடே கண்ணோக்கிப் பார்க்க வேண்டுமென்று, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே தேவனாக என்றென்றைக்கும் ஜீவித்து
அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்
சர்வ வல்லமையுள்ள அநாதி தேவனே, திருச்சபையாகிய சரீரம் முழுவதையும் உம்முடைய ஆவியினாலே ஆண்டு
பரிசுத்தமாக்கிக் கொண்டு வருகிறீர். அதன் அவயவங்களாகிய ஒவ்வொருவரும் தான்
அழைக்கப்பட்டிருக்கிற நிலைமையிலும் பணிவிடையிலும் உண்மையாயும் பக்தியாயும் உம்மைச்
சேவிக்கும்படி உம்முடைய பரிசுத்த சபையிலுள்ள எவ்வகையானவர்களுக்காகவும் நாங்கள்
உமது சந்ததியில் செய்கிற விண்ணப்பங்களையும் ஜெபங்களையும், எங்கள்
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினிமித்தம் ஏற்றுக்கொண்டருளும். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம்
கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 1 கொரிந்தியர் 11.26
No comments:
Post a Comment