Wednesday, December 21, 2022

Sixth Sunday before Christmas

 கிறிஸ்து பிறந்த திருநாளுக்கு முன்வரும் 6ம் ஞாயிறு

(வருகையின் ஞாயிறுக்கு முன்வரும் 2ம் ஞாயிறு)

Sixth Sunday before Christmas

ஆரம்ப வசனம்

நியாயப் பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது. கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. பரி. யோவான் 1.17

 

சுருக்க ஜெபம்

எங்கள் மீட்பரும் ஆண்டவருமாகிய கடவுளே, உமது ஜனங்களின் கூக்குரலைக் கேட்டு, அவர்களை அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்க உமது ழியனாகிய மோசேயை அனுப்பினவரே, பாவமும் மரணமுமாகிய இவற்றின் கொடூரத்தின்று எங்களை விடுதலையாக்கி, உமது ஆவியானவரின் வழிநடத்துதலினால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட உம்முடைய இராஜ்ஜியத்திற்கு எங்களைக் கொண்டுவர வேண்டும் என்று, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

வானத்திலிருக்கிறங்கின அப்பம் இதுவே. இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப் போலல்ல. அவர்கள் மரித்தார்களே. இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். பரி.யோவான் 6.58

No comments:

Post a Comment