பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 6ம் ஞாயிறு
6th Sunday
After Pentecost
ஆரம்ப வசனம்
துர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத்
தரித்துக்கொள்ளுங்கள். ரோமர் 13.14
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல கடவுளே, உம்மையல்லாமல்
நாங்கள் உமக்குப் பிரியமுள்ளவர்களாய் நடக்கத் திராணியற்றவர்களாய் இருக்கிறோம்.
உமது பரிசுத்த ஆவியானவர் எல்லாக் காரியங்களிலும் எங்கள் இருதயங்களை நடத்தி
ஆண்டுகொள்ளும்படி இரக்கமாய்க் கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்
சிருஷ்டியாய் இருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின. 2
கொரிந்தியர் 5.17
No comments:
Post a Comment