Thursday, December 22, 2022

Pentecost (Whit Sunday)

பரிசுத்த ஆவியின் திருநாள்

(பெந்தெகொஸ்தே திருநாள்)

Pentecost (Whit Sunday)

ஆரம்ப வசனம்

நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது. அல்லேலூயா. ரோமர் 5.5

அல்லது

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். அல்லேலூயா. அப். 1.8

 

சுருக்க ஜெபங்கள்

தேவனே இதைப்போலொத்த ஓர் காலத்தில் உம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்பி, அவருடைய ஒளியினாலே விசுவாசமுள்ள உம்முடைய ஜனத்தின் இருதயங்களைப் போதித்துப் பிரகாசிப்பித்தீரே. அந்த ஆவியினாலே நாங்கள் எல்லாக் காரியங்களையும் குறித்து நிதானமாய் யோசிக்கவும், அவருடைய பரிசுத்த தேற்றரவினாலே இடைவிடாமல் சந்தோஷிக்கவும் கட்டளையிட வேண்டுமென்று, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே தேவனாகச் சதாகாலமும் ஜீவித்து அரசாளுகிற எங்கள் இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவின் புண்ணியங்களினிமித்தம் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

எல்லாம் வல்ல கடவுளே, பெந்தெகொஸ்தே நாளிலே வானத்திலிருந்து இறங்கிய காற்றோடும் அக்கினிமயமாக நாவுகளோடும் உமது பரிசுத்த ஆவியை, சீஷர்கள் மேல் அனுப்பி அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரஸ்தாபிக்க அவர்களைச் சந்தோஷத்தினாலும் தைரியத்தினாலும் நிரப்பினீரே. உமது சந்தியத்திற்குச் சாட்சியாய் இருக்கவும் எல்லா மனிதர்களையும் உமது அன்பின் அனலால் இழுத்துக்கொள்ளவும் உமது பரிசுத்த ஆவியின் வல்லமையினால் எங்களை அனுப்பியருளும். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக் கேட்கிறோமே என்றார்கள். அல்லேலூயா. அப்போஸ்தலர் 2.4, 11

No comments:

Post a Comment