அப்போஸ்தலனாகிய பரிசுத்த பர்னபாவின் திருநாள் (ஜூன் 11)
St.
Barnabas the Apostle (11 June)
ஆரம்ப வசனம்
பர்னபா நல்லவனும், பரிசுத்த
ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாய் இருந்தான். அப்போஸ்தலர் 11.24
சுருக்க ஜெபம்
எங்கள் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கடவுளே, பெற்றுக் கொள்ளுவதைவிட கொடுப்பதே மிகவும் நலமானது
என்று உம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்து எங்களுக்குப் போதித்திருக்கிறாரே. உமது
அப்போஸ்தலனாகிய பரிசுத்த பர்னபாவின் முன்மாதிரியைப் பின்பற்றி, பிறரை நியாயந்தீர்ப்பதில் தாரளமாயிருக்கவும், எங்களுடைய
சேவையில் சுயநலமற்றவர்களாய் இருக்கவும், எங்களுக்கு
உதவிபுரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை. நான் உங்களை
சிநேகிதர் என்றேன். ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும்
உங்களுக்கு அறிவித்தேன் என்று இயேசு சொன்னார். பரி.யோவான் 15.15
No comments:
Post a Comment