திருத்துவத் திருநாள்
(பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் முதலாம் ஞாயிறு)
Trinity
Sunday (Pentecost 1)
ஆரம்ப வசனம்
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்.
வெளி.4.8
சுருக்க ஜெபங்கள்
சர்வ வல்லமையுள்ள நித்திய தேவனே, மெய்விசுவாசத்தைப் பற்றிக் கொண்டு மகிமை பொருந்திய நித்திய திரித்துவத்தை
அறிக்கையிடவும் வல்லமை பொருந்திய திவ்விய மகத்துவத்தை ஏகத்துவமாக வணங்கவும் உமது
அடியாராகிய எங்களுக்குக் கிருவை செய்திருக்கிறீரே. இந்த விசுவாசத்திலே எங்களை
உறுதிப்படுத்தி இதற்கு விரோதமான யாவற்றிற்கும் எப்பொழுதும் எங்களை விலக்கிக்
காப்பாற்ற வேண்டுமென்று, சதாகாலமும் ஒரே தேவனாக ஜீவித்து
அரசாளுகிற உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
எல்லாம் வல்ல நித்திய கடவுளே, நீர்
பிதாவாகவும் குமாரனாகவும், தூய ஆவியாகவும் உம்மை வெளிப்படுத்தி,
அன்பின் பூரண ஒற்றுமையால் இணைக்கப்பட்டு, என்றும்
ஜீவித்து அரசாளுகிறீர். இப்பொழுதும் எப்பொழுதும் களிகூறவும், இந்த விசுவாசத்தில் எங்களை நிலைநிறுத்தியருள வேண்டும் என்று
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், 'அப்பா பிதாவே’ என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது
குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். கலாத்தியர் 4.6
No comments:
Post a Comment