சுவிசேஷகனாகிய பரிசுத்த யோவானின் திருநாள் (டிசம்பர் 27)
St.
John the Evangelist (27 December)
ஆரம்ப வசனம்
அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சி கொடுத்து இவைகளை
எழுதினான். அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம். பரி.யேவான் 21.24
சுருக்க ஜெபம்
இரக்கமுள்ள பிதாவே, உமது
திருக்குமாரன் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறாரே. நாங்கள் எங்கள் மத்தியில் வந்துள்ள
அந்த ஒளியில் நடக்கவும் கடைசியில் அவரை நித்திய ஜீவனுக்காக ஒளியாக
அறிந்துகொள்ளவும் தக்கதாக, உமது அப்போஸ்தலனும்
சுவிசேஷகனுமாகிய பரிசுத்த யோவான் உபதேசத்ததால் உமது திருச்சபையை வழிநடத்தியருள
வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும்
ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
அந்த வார்த்தை மாமிசமாகி, நமக்குள்ளே
வாசம்பண்ணினார். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின் மேல் கிருபை
பெற்றோம். பரி.யோவான் 1.14, 16
No comments:
Post a Comment