அப்போஸ்தலனாகிய பரிசுத்த யாக்கோபின் திருநாள் (ஜூலை 25)
St.
James the Apostle (25 July)
ஆரம்ப வசனம்
இயேசு கலிலேயாக் கடலோரமாய்
நடந்துபோகையில், யாக்கோபையும், அவன்
சகோதரன் யோவானையும் கண்டு, அவர்களையும் அழைத்தார். உடனே
அவர்கள் அவருக்குப் பின் சென்றார்கள். பரி.மத்தேயு 4.18, 21
சுருக்க ஜெபம்
இரக்கமுள்ள கடவுளே, உம்முடைய
அப்போஸ்தலனாகிய பரிசுத்த யாக்கோபு தன்னுடைய தகப்பனையும், தனக்குண்டான
யாவற்றையும் விட்டுவிட்டு, தனது மரண பரியந்தம் உமது குமாரன்
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினதுபோல, நாங்களும் எங்கள் எல்லா
சுயநலமான ஆசைகளையும் வெறுத்துவிட்டு, உம்முடைய அழைப்புக்கு
எப்பொழுதும் இணங்க ஆயத்தமாயிருக்க கிருபை செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
No comments:
Post a Comment