Thursday, December 22, 2022

10th Sunday After Pentecost

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 10ம் ஞாயிறு

10th Sunday After Pentecost

 

TENTH SUNDAY AFTER PENTECOST

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 10ம் ஞாயிறு

 

ஆரம்ப வசனம்

கர்த்தருக்குப் போதிக்கத் தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. 1கொரிந்தியர் 2.16

 

சுருக்க ஜெபம்

மானிடரின் பிதாவே, உமது ஒரே பேறான குமாரன், அடிமையின் சாயலைத் தரித்துக்கொள்ளவும் சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தவும் அவரைத் தந்தருளினீரே. அவருடைய தாழ்மையைத் தரித்து, அவரோடு மகிமையில் வரவும், இயேசு கிறிஸ்துவிலிருந்த சிந்தையை எங்களுக்குத் தந்தருளவும் வேண்டும் என்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிற இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

மாமிச சிந்தை மரணம். ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ரோமர் 8.6

No comments:

Post a Comment