Thursday, December 22, 2022

Palm Sunday

 குருத்தோலை ஞாயிறு

(கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் ஞாயிறு)

Palm Sunday

ஆரம்ப வசனம்

தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா. கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். உன்னதத்திலே ஓசன்னா. பரி.மத்தேயு 21.9

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள நித்திய தேவனே, மனிதரிடத்தில் உருக்கமாய் அன்பு கூர்ந்த தயவுள்ள பிதாவே, உமது குமாரனும் எங்கள் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து காட்டிய மகா தாழ்மையை எல்லா மனிதரும் பின்பற்றும்படி அவர் எங்கள் மாமிசதேகத்தைத் தரித்துக்கொள்ளவும் சிலுவையில் மரணத்தை உத்தரிக்கவும் அவரை அனுப்பினீரே. அவர் காட்டிய பொறுமையை நாங்கள் பின்பற்றி நடக்கவும், அவருடைய உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்களாகவும், எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் கிருபை செய்தருளும். ஆமென்

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம் பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாது, உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். பரி.மத்தேயு 26.42

No comments:

Post a Comment