கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் நான்காம் ஞாயிறு
Easter
4
ஆரம்ப வசனம்
முதல் வருடம்
அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்பு கூருகிறீர்கள்.
இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லி முடியாததும் மகிமையால்
நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களி கூருகிறீர்கள். அல்லேலூயா.
1பேதுரு 1.8
இரண்டாம் வருடம்
இயேசு நானே வழியும், சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன் என்றார். அல்லேலூயா. பரி.யோவான் 14.6
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல கடவுளே, பாவிகளுடைய
அடங்காத சித்தத்தையும் ஆசாபாசங்களையும் அடக்கி ஆளுகிறவரே. பலவிதமான மாறுதல்களுள்ள
இவ்வுலகத்தில் நாங்கள் இருக்கையில் எங்கள் இருதயம் நீடிய சந்தோஷமுள்ள மேலுலகத்தைப்
பற்றிக்கொண்டு, உறுதியாய் நிலைத்திருக்கும்படி, நீர் கற்பித்தவைகளை நாங்கள் நேசிக்கவும் நீர் வாக்குத் தத்தம் பண்ணினவைகளை
விரும்பவும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் எங்களுக்குக் கிருபை
செய்தருளும். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
இதோ, வாசற்படியிலே நின்று
தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், அவரிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்
பண்ணுவேன். அவனும் என்னோடு போஜனம் பண்ணுவான். அல்லேலூயா. வெளி.3.20
No comments:
Post a Comment