பாக்கியவதியான கன்னிமரியாளின் திருநாள் (செப்டம்பர் 8)
The
Blessed Virgin Mary (8 September)
ஆரம்ப வசனம்
விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே
அவளுக்குச் சொல்லப் பட்டவைகள் நிறைவேறும் என்றாள். பரி.லூக்கா 1.45
அல்லது
அதற்கு மரியாள், இதோ,
நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய
வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றான். பரி.லூக்கா 1.38
சுருக்க ஜெபம்
சர்வ வல்லமையுள்ள கடவுளே, பாக்கியவதியாகிய
கன்னி மரியாள் அவர்களை, உமது ஒரே குமாரனின் தாயாராகத்
தெரிந்து கொண்டவரே, உமது ஒரே குமாரனின் இரத்ததினால்
மீட்கப்பட்ட நாங்கள் அப்பாக்கியவதியோடு உமது நித்திய இராஜ்ஜியத்தின் மகிமையில்
பங்கு பெற கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக
இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை
முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார். பரி.லூக்கா
11.28
அல்லது
மரியாளோ அந்தச் சங்கதிகளை யெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனை பண்ணினாள். பரி.லூக்கா .19
No comments:
Post a Comment