பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 9ம் ஞாயிறு
9th Sunday
After Pentecost
ஆரம்ப வசனம்
அவர் நீதியை மார்க்கவசமாய் அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்துக்கொண்டார். ஏசாயா 59.17
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல கடவுளே, எங்களை
இரட்சித்துக்கொள்ள நாங்கள் திராணியற்றவர்கள் என்று அறிந்திருக்கிறீரே.
சரீரத்திற்கு நேரிடும் எந்த உபத்திரவங்களும் ஆத்துமாவை விரோதித்துச்
சேதப்படுத்தும் எந்த பொல்லாத நினைவுகளும் எங்களை அணுகாதபடி, புறம்பாக
எங்கள் சரீரத்தையும் உள்ளாக எங்கள் ஆத்துமாவையும் காப்பாற்ற வேண்டுமென்று எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும்,
இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்
கொண்டிருக்கக்கடவோம். 1தெசலோனிக்கேயர் 5.8
No comments:
Post a Comment