பிரசன்னத் திருநாளுக்குப் பின்வரும் 3ம் ஞாயிறு
Epiphany 3
ஆரம்ப வசனம்
இயேசுவைக் கொண்டு, தேவன்
உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும்
அடையாளங்களையும் நடப்பித்து அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
அப்போஸ்தலர் 2.22
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல கடவுளே, உமது
இரட்சிப்பின் அன்பை, அடையாளங்கள் மூலமாகவும், அற்புதங்கள் மூலமாகவும் உமது திருக்குமாரன்
வெளிப்படுத்தினாரே, உமது ஜனங்கள் உமது பரலோக
கிருபையினால் புதுப்பித்து, எங்களுடய எல்லா பலவீனத்திலும்
உமது வல்லமையின் சக்தியினால் தாங்கி ஆதரித்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய
மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. பரி.யோவான் 1.14
No comments:
Post a Comment