கிறிஸ்து பிறந்த திருநாளுக்கு முன்வரும் 8ம் ஞாயிறு
(வருகையின் ஞாயிறுக்கு முன்வரும் 4ம் ஞாயிறு)
Eighth
Sunday before Christmas
ஆரம்ப வசனம்
அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டது
போல், ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே
அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். ரோமர் 5.19.
சுருக்க ஜெபம்
பரம பிதாவே, பிசாசினுடைய
கிரியைகளை அழிக்கவும், எங்களைக் கடவுளுடைய புத்திரரும்,
நித்திய ஜீவனுக்குச் சுதந்தரரும் ஆக்கவும், உமது
திருக்குமாரனைப் பிரசன்னமாகம்படிச் செய்தீரே. இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கிற
நாங்கள், அவர் வல்லமையோடு மறுபடியும் பிரசன்னமாகும் பொழுது,
அவருடைய மகிமையுள்ள நித்திய ராஜ்ஜியத்தில் அவருக்கு
ஒப்பானவர்களாகும் பொருட்டு, அவர் சுத்தமுள்ளவராய்
இருக்கிறதுபோல, நாங்களும் எங்களைச்
சுத்திகரித்துக்கொள்ளும்படி, எங்களுக்குக் கிருபை செய்ய
வேண்டும் என்று, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும், ஒரே கடவுளாக என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
No comments:
Post a Comment