Wednesday, December 21, 2022

Epiphany of Our Lord

 நமது ஆண்டவரின் பிரசன்னத் திருநாள்

Epiphany of Our Lord

ஆரம்ப வசனம்

எழும்பிப் பிரகாசி. உன் ஒளி வந்தது. கர்த்தருடைய மகிமை உன் மேல் உதித்தது. ஏசாயா 60.1.

அல்லது

சூரியன் உதிக்கிற திசை தொடங்கி அது அஸ்தமிக்கிற திசை வரைக்கும் என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 1.11.

 

சுருக்க ஜெபம்

நித்திய கடவுளே, ஒரு நட்சத்திரத்தின் ஒளியினால் ஞானிகளை வழி நடத்தி அவர்கள் உமது திருக்குமாரனை ஆராதிக்கச் செய்தீரே. உலக முழுவதும் உமது மகிமையைக் காணத்தக்கதாக, அவருடைய ஒளியினால் இவ்வுலகிலுள்ள சகல தேசங்களையும் வழி நடத்த வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள். பரி.மத்தேயு 2.2

No comments:

Post a Comment