Wednesday, December 21, 2022

Ninth Sunday before Christmas

 கிறிஸ்து பிறந்த திருநாளுக்கு முன்வரும் 9ம் ஞாயிறு

(வருகையின் ஞாயிறுக்கு முன்வரும் 5ம் ஞாயிறு)

Ninth Sunday before Christmas

ஆரம்ப வசனம்

பூமியும் அதின் நிறைவும், உலகமும், அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. சங்கீதம் 24.1

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல கடவுளே, வானத்தையும் பூமியையும் படைத்து, உமது திருக்கரங்களைப் பகுத்துணரவும், உம்மைப் பக்திவினயத்தோடும், நன்றியறிதலோடும் சேவிக்கவும், போதித்தருள வேண்டும் என்று உம்மோடும், பரிசுத்த ஆவியோடும், எல்லாவற்றிற்கும் மேலாக இப்பொழுதும் எப்பொழுதும் மிக மேன்மையோடு அரசாளும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

எந்த வேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.

நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும், நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். சங்கீதம் 1004.27, 28

No comments:

Post a Comment