Thursday, December 22, 2022

2nd Sunday After Pentecost

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 2ம் ஞாயிறு

(திரித்துவத் திருநாளுக்குப் பின்வரும் முதலாம் ஞாயிறு)

2nd Sunday After Pentecost

ஆரம்ப வசனம்

முதல் வருடம்

எல்லாரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். 1கொரி.12.13

இரண்டாம் வருடம்

நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம். எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது. 1யோவான் 1.3

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல நித்திய கடவுளே, திருச்சபையாகிய உமது சரீரம் முழுவதையும் உம்முடைய ஆவியினாலே ஆண்டு பரிசுத்தமாக்கிக் கொண்டு வருகிறீர். அதின் அவயவங்களாகிய ஒவ்வொருவரும் தாங்கள் அழைக்கப்பட்டிருக்கிற நிலைமைகளிலும் பணிவிடையிலும் உமது நாம மகிமைக்காக உண்மையாயும் பக்தியாயும், உம்மைச் சேவிக்கும்படி உமது பரிசுத்த சபையிலுள்ள எவ்வகையானவர்ளுக்காகவும் உமது சன்னிதானத்தில் நாங்கள் செய்கிற விண்ணப்பங்களை எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய்க் கேட்டருளும். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

முதல் வருடம்

ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். எபேசியர் 2.19, 20

இரண்டாம் வருடம்

நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள். பரி.யோவான் 13.35

No comments:

Post a Comment