கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் மூன்றாம் ஞாயிறு
Easter
3
ஆரம்ப வசனம்
முதல் வருடம்
இயேசு மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு, திபேரியா கடற்கரையில் மறுபடியும் சீஷர்களுக்குத்
தம்மை வெளிப்படுத்தினார். அல்லேலூயா பரி.யோவான் 21.1
இரண்டாம் வருடம்
''நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்''
என்று இயேசு சொன்னார். அல்லேலூயா. பரி.யோவான் 11.25
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல கடவுளே, உமது
குமாரன் இயேசு கிறிஸ்து தம்மிடத்தில் நம்பிக்கை வைக்கிற யாவருக்கும்
உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறாரே, எங்களைப் பாவத்தின் மரணத்தினின்று நீதியின் வாழ்வுக்கு எழுப்புவதின் மூலம்
நாங்கள் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் சதாகாலங்களிலும் ஜீவித்து அரசாளுகிற அந்த
மேலான இடத்திற்குரியவைகளை நோக்கி கிருபை செய்தருள வேண்டுமென்று
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
இயேசு அவர்களை நோக்கி வாருங்கள், போஜனம் பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால்
அவர்களில் ஒருவனும் நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. அப்பொழுது இயேசு வந்து,
அப்பத்தையும் மீனையும் எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார்.
அல்லேலூயா. பரி.யோவான் 21.12,13
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே
நாடுங்கள் ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள். உங்கள் ஜீவன்
கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. அல்லேலூயா. கொலோசெயர் 3.2.3
No comments:
Post a Comment