Thursday, December 22, 2022

Ash Wednesday

 சாம்பற் புதன்கிழமை

Ash Wednesday

ஆரம்ப வசனம்

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான். நொறுங்குண்டதும் நறுங்கண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். சங்கீதம் 51.17

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள நித்திய பராபரனே, தேவரீர் சிருஷ்டித்தவைகளில் ஒன்றையும் பகையாதவரும், தங்கள் பாவங்களினிமித்தம் மதஸ்தாபப்படுகிற யாவருக்கும் மன்னிக்கிற வருமாயிருக்கிறீர். எங்களுடைய பாவங்களைக் குறித்து நாங்கள் துக்கித்துப் புலம்பி, எங்கள் நிர்ப்பாக்கியத்தை அறிக்கையிட்டு சம்பூரண இரக்கமுள்ள தேவரீரிடத்தில் குறைவற்ற பாவ விமோசனத்தையும் மன்னிப்பையும் பெறத்தக்கதாக, எங்களுக்குள்ளே நொறுங்குண்ட புதிதான இருதயத்தைச் சிருஷ்டிக்க வேண்டுமென்று, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தன் காலத்தில் தன் கனியைத் தருவான். சங்கீதம் 1.2,3

No comments:

Post a Comment