பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 14ம் ஞாயிறு
14th Sunday
After Pentecost
ஆரம்ப வசனம்
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
சங்கீதம் 103.13
சுருக்க ஜெபம்
உம்மிடத்தில் நம்பிக்கை வைக்கிற யாவரையும் காப்பாற்றுகிற
ஆண்டவராகிய கடவுளே, உம்மாலேயன்றி யாதொன்றும் பெலனாயும்
யாதொன்றும் பரிசுத்தமாயும் இராது. பரம பிதாவே, நீர் எங்களை
ஆளுகிறவரும் வழி நடத்துகிறவருமாய் இருப்பதினால், நாங்கள்
கடைசியில் நித்தியமானவைகளை இழந்து போகாதபடிக்கு, அநித்தியமானவைகளைக்
கடந்து செல்ல, எங்கள் ஆண்டராகிய இயேசு கிறிஸ்துவின்
நிமித்தம் கிருபை செய்தருளும். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்
மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. சங்கீதம் 103.17
No comments:
Post a Comment