கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்தினம்
தொங்கவிடப்பட்ட எல்லா திரைகளும் நீக்கப்பட வேண்டும்
Easter
Eve
ஆரம்ப வசனம்
ஆண்டவரே, உமது
பிரியமுள்ள குமாரனும் எங்கள் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்குள்ளாக
ஞானஸ்நானம் பெற்றிருக்கிற நாங்கள் எங்கள் கெட்ட இச்சைகளை இடைவிடாமல் அழித்துவருகிறதினாலே,
அவரோடே அடக்கம் பண்ணப்படவும், கல்லறையை மரண
வாசலையும் கடந்து சந்தோஷமுள்ள உயிர்த்தெழுதலை அடையவும் எங்களுக்காக மரித்து,
அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்த உம்முடைய குமாரனும் எங்கள்
கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் புண்ணியங்களினிமித்தம் கிருபை செய்தருளும்.
ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக இந்த ஆலயத்தை இடித்துப்
போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை
எழுப்புவேன் என்றார். பரி.யோவான் 2.19
No comments:
Post a Comment