சகல ஆத்துமாக்களின் ஞாபகார்த்தம்
Commemoration
Of The Faithful Departed
ஆரம்ப வசனம்
இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோம்.
அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டு
வருவார். 1 தெசலோனிக்கேயர் 4.14
சுருக்க ஜெபம்
இரக்கமுள்ள கடவுளே, உமது
குமாரன் இயேசு கிறிஸ்து, விசுவாசிகள் யாவருக்கும்
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறாரே. நாங்களும் மரித்த எங்கள் சகோதரர்களோடு
கடைசியில் உமது நித்திய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கத்தக்கதாக, எங்களைப் பாவத்தின் மரணத்தினின்று நீதியின் ஜீவனைப் பெற்றுக்
கொள்ளத்தக்கதாக எழுப்பியருளவேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை
முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
என் மாமிசத்தைப் புசித்து, என்
இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசிநாளில்
எழுப்புவேன். பரி.யோவான் 6.54.
அல்லது
இயேசு அவனை
நோக்கி, நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை
விசுவாசிக்கிறவன் மரித்தாலும பிழைப்பான். உயிரோடிருந்து என்னை
விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் என்றார். பரி.யோவான்
11.25, 26
No comments:
Post a Comment