பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் கடைசி ஞாயிறு
Last
Sunday After Pentecost
ஆரம்ப வசனம்
அவருடைய வாக்குத்தத்தத்தின்
படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று
காத்திருக்கிறோம். 2பேதுரு 3.13
சுருக்க ஜெபம்
இரக்கமுள்ள ஆண்டவரே, உம்மிடத்தில்
அன்பு கூருகிறவர்களுக்கு மனோவாக்குக்கு எட்டாத நன்மைகளை ஆயத்தம் பண்ணி
இருக்கிறவரே. நாங்கள் எல்லாவற்றிற்கும் அதிகமாய் உம்மிடத்தில் அன்பு கூரவும்
நாங்கள் விரும்புகிற எல்லாவற்றிற்கும் மேற்பட்ட உம்முடைய வாக்குத் தத்தங்களைப்
பெற்றுக்கொள்ளவும், உம்மைப் பற்றும் அன்பாகிய வரப்பிரசாதத்தை
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் எங்கள் இருதயங்களில் பொழிந்தருளவும்
வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும்
உலகத்தாரல்ல என்று இயேசு சொன்னார். பரி.யோவான் 17.16.
No comments:
Post a Comment